Thursday, April 30, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு (197)

பாடல்:
*******

வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியொடு
கொடிநுடங்கு மிசைய தேரினர் எனாஅக்,
கடல்கண் டன்ன ஒண்படைத் தானையொடு
மலைமாறு மலைக்குங் களிற்றினர் எனாஅ,
உரும்உடன் றன்ன உட்குவரு முரசமொடு
செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ,
மண்கெழு தானை, ஒண்பூண் வேந்தர்
வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே;
எம்மால் வியக்கப் படூஉ மோரே,
இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த
குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு,
புன்புல வரகின் சொன்றியொடு, பெறூஉம்,
சீறூர் மன்னர் ஆயினும், எம்வயின்
பாடறிந்து ஒழுகும் பண்பி னோரே;
மிகப்பேர் எவ்வம் உறினும், எனைத்தும்
உணர்ச்சி யில்லோர் உடைமை யுள்ளேம்;
நல்லறி வுடையோர் நல்குரவு
உள்ளுதும், பெரும! யாம், உவந்து நனி பெரிதே!

                - கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்.

திணை: பொதுவியல் திணை

துறை: பரிசில் கடா நிலை துறை

பாடல் கூறும் நெறி:
*********************

* காற்றைப்போல் தாவிச் செல்லும் குதிரை கொடி பறக்கும் தேர் கடல் போல் ஆட்படை தோற்றத்தால் மலையையும் மலைக்கவைக்கும் களிறு இடி போல் முழங்கும் முரசம் இவற்றையெல்லாம் கொண்டவராய் போரில் வெற்றி கண்டவர் ஆயினும் மண்ணகமெல்லாம் பரந்து நிற்கும் தானை உடையவர் ஆயினும் வெற்றியின் அடையாளமாக ஒளிறும் பூண் உடைய வேந்தராயினும் அவரது வெண்கொற்றக்குடைச் செல்வத்தைக் கண்டு நான் வியக்கமாட்டேன்.

* எம்மால் வியக்கப்படுபவர் ஆட்டுக்குட்டி மேய்ந்த பின்னர் வீட்டு முள்வேலியில் துளிர்த்துப் படர்ந்திருக்கும் முஞ்ஞைக் கொடியைச் சமைத்து வரகரிசிச் சோற்றுடன் உண்ணும் சிற்றூர் மன்னர் ஆயினும் என் பெருமையை உணர்ந்து நடந்துகொள்ளும் பண்பாளரே ஆவர்.

* மிகப் பெருந் துன்பத்தில் உழன்றாலும் இரக்க-உணர்ச்சி இல்லாதவருடைய செல்வத்தைப் பெற நினைக்கவும் மாட்டேன். நல்லறிவு உடையோர் வறுமையை எண்ணிப் பார்த்துப் பெருமை கொள்வேன்.

பாடல் குறிப்பு:
***************

இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு (எட்டுத்தொகை). இப்பாடலை இயற்றியவர் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார். பாடல் எண் 197. இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் புறப்பொருள் சார்ந்தவையாகும்.


தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுவோம். தமிழிற்கு மேலும் அழகு சேர்ப்போம்!

வளர்க தமிழ்!      வாழ்க தமிழ்!

Wednesday, April 29, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு (196)

பாடல்:
*******

ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்
ஒல்லாது இல்லென மறுத்தலும், இரண்டும்,
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது
இல்லென மறுத்தலும், இரண்டும், வல்லே;
இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர்
புகழ்குறை படூஉம் வாயில் அத்தை
அனைத்தா கியர், இனி; இதுவே எனைத்தும்
சேய்த்துக் காணாது கண்டனம் ; அதனால்,
நோயிலர் ஆகநின் புதல்வர்; யானும்,
வெயிலென முனியேன், பனியென மடியேன்,
கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை,
நாணலது இல்லாக் கற்பின் வாணுதல்
மெல்லியல் குறுமகள் உள்ளிச்
செல்வல் அத்தை ; சிறக்க, நின் நாளே!

                - அவூர் மூலங்கிழார்

திணை: பொதுவியல் திணை

துறை: பரிசில் கடா நிலை துறை

பாடல் கூறும் நெறி:
*********************

* பாண்டியன் புலவருக்குப் பரிசில் தருவதற்குக் காலம் கடத்திவந்தான். இது முறையன்று என்று புலவர் எடுத்துக்கூறும் பாடல் இது. வழங்காதவனையும் வாழ்த்துகிறார் புலவர்.

* ஒன்றைச் செய்ய முயலும்போது தன்னால் செய்யமுடிவதைச் செய்யமுடியும் என்று கூறுவதும், செய்ய முடியாததைச் செய்யமுடியாது என்று வெளிப்படையாக மறுத்தலும் எல்லாரும் சொல்லக்கூடியதுதான்.

* அப்படிச் சொல்வதை விட்டுவிட்டு, செய்ய முடியாததை முடியும் என்று சொல்லிக்கொண்டு காலம் கடத்தலும், கொடுக்க முடிவதை இல்லை எனக் கூறி மறுத்தலும் ஆகிய இரண்டும் உதவி கேட்போரை வாடச்செய்வது ஆகும்.

* அன்றியும், கொடுத்துக் காப்பாற்றுபவரின் புகழை மங்கச்செய்யும் செயலாகும். அத்தை, எல்லாம் முடிந்துவிட்டது. இனிக் காத்திருந்தாலும் இதுதான் நடக்கப்போகிறது. எல்லாவற்றையும் தொலைநூரத்தில் பார்க்கிறேன்.

பாடல் குறிப்பு:
***************

இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு (எட்டுத்தொகை). இப்பாடலை இயற்றியவர் அவூர் மூலங்கிழார். பாடல் எண் 196. இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் புறப்பொருள் சார்ந்தவையாகும்.


தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுவோம். தமிழிற்கு மேலும் அழகு சேர்ப்போம்!

வளர்க தமிழ்!      வாழ்க தமிழ்!

Tuesday, April 28, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு (195)

பாடல்:
*******

பல்சான் றீரே! பல்சான் றீரே!
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்,
பயனில் மூப்பின், பல்சான் றீரே!
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ;
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது ; அன்றியும்,
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே.

                - நரிவெரூஉத் தலையார்

திணை: பொதுவியல் திணை

துறை: பொருண் மொழிக் காஞ்சித் துறை

பாடல் கூறும் நெறி:
*********************

* கயல்மீன் முள்ளைப்போல் வெண்மைநிறம் கொண்டிருக்கும் நரைமுடியைக் கன்னமெல்லாம் கொண்டிருக்கும் நல்லவர்களே!

* பிறருக்கும் பயன்படாமல் வாழும் நல்லவர்களே! கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன் உயிரை எடுத்துக்கொள்பவன் உங்களது உயிரைக் சூலம் ஏந்திய பெருந் திறனாளி ஒருவன் வாங்கும்போது “அய்யோ வாங்குகிறானே!” இன்று வருந்துவீர்கள்.

* இப்போது எதற்கும் கவலைப்பட மாட்டீர்கள். இப்போதே நீங்கள் ஒன்று செய்யுங்கள். அதனால் நீங்கள் சாகும்போது கவலை இல்லாமல் இருக்கலாம்.

* உங்களால் நல்லது செய்ய முடியாவிட்டாலும் நல்லது-அல்லாததை செய்வதைத் தவிர்த்துவிடுங்கள். அதுதான் எல்லாரும் மகிழ்வது.

பாடல் குறிப்பு:
***************

இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு (எட்டுத்தொகை). இப்பாடலை இயற்றியவர் நரிவெரூஉத் தலையார். பாடல் எண் 195. இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் புறப்பொருள் சார்ந்தவையாகும்.


தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுவோம். தமிழிற்கு மேலும் அழகு சேர்ப்போம்!

வளர்க தமிழ்!      வாழ்க தமிழ்!

Monday, April 27, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு (194)

பாடல்:
*******

ஓரில் நெய்தல் கறங்க, ஓர்இல்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,
புணர்ந்தோர் பூவணி அணியப், பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்,
படைத்தோன் மன்ற, அப் பண்பி லாளன்!
இன்னாது அம்ம, இவ் வுலகம்;
இனிய காண்க, இதன் இயல்புணர்ந் தோரே.

                - பக்குடுக்கை நன்கணியார்

திணை: பொதுவியல் திணை

துறை: பொருண் மொழிக் காஞ்சித் துறை

பாடல் கூறும் நெறி:
*********************

* ஓர் இல்லத்தில் நெய்தல் பறையின் ஒலி கேட்கிறது. மற்றோர் இல்லதில் திருமண முழவின் ஒலி கேட்கிறது. ஒரே நாளில் ஒரே ஊரில் இந்த நிகழ்வுகள்.

* திருமண இல்லத்தில் பூமாலை சூடி மகிழ்கின்றனர். நெய்தல்பண் ஒலிக்கும் இல்லத்தில் ஒருவன் இறந்துவிட்டதால் அவனை இழந்தவர் கண்ணீர் மல்கக் கலங்குகின்றனர்.

* இப்படி உலகியலை ஒருவன் படைத்திருக்கிறான். அவன் பண்பு இல்லாதவன். இந்த உலகம் துன்ப மயமானது. இந்த இயல்பினை உணர்ந்துகொள்ள வேண்டும். அதனை எண்ணிக் கலங்கக் கூடாது.

* இனியவற்றைக் காணவேண்டும். இன்னாதவற்றில் இன்பத்தைக் காணவேண்டும். துன்பத்தில் இன்பம் காணவேண்டும்.


பாடல் குறிப்பு:
***************

இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு (எட்டுத்தொகை). இப்பாடலை இயற்றியவர் பக்குடுக்கை நன்கணியார். பாடல் எண் 194. இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் புறப்பொருள் சார்ந்தவையாகும்.


தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுவோம். தமிழிற்கு மேலும் அழகு சேர்ப்போம்!

வளர்க தமிழ்!      வாழ்க தமிழ்!

Sunday, April 26, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு  (3)

உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை
நிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற,
ஏம முரசம் இழுமென முழங்க,
நேமி யுய்த்த நேஎ நெஞ்சின்,
தவிரா ஈகைக், கவுரியர் மருக! 5
செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ!
பொன் னோடைப் புகர் அணிநுதல்
துன்னருந் திறல் கமழ்கடா அத்து
எயிரு படையாக, எயிற்கதவு இடாஅக்
கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கில். 10
பெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்து
மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்
கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி!
நிலம் பெயரினும், நின்சொற் பெயரல்;
பொலங் கழற்காற்,புலர் சாந்தின் 15
விலங் ககன்ற வியன் மார்ப!
ஊர் இல்ல, உயவு அரிய,
நீர் இல்ல, நீள் இடைய,
பார்வல் இருக்கைக், கவிகண் நோக்கிற்,
செந்தொடை பிழையா வன்கண் ஆடவர் 20
அம்புவிட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்
திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந்து உயவும்
உன்ன மரத்த துன்னருங் கவலை,
நின்நசை வேட்கையின் இரவலர் வருவர்! அது
முன்னம் முகத்தின் உணர்ந்து, அவர் 25
இன்மை தீர்த்தல் வன்மை யானே.
                 - இரும்பிடர்த் தலையார்.

திணை : பாடாண்த்திணை.

துறை : செவிறிவுறூஉ , வாழ்தியல் துறை

பாடல் கூறும் நெறி

*தஞ்சம் என வந்தவர்க்கு தரணியில் உன் உயிர் உள்ளவரை பாதுகாக்க வேண்டும்.
*பெண் என்பவளாள் எதையும் தாங்க இயலும்.
*உயிர்களுக்கு உதவும் பொழுது தான் உயர்வு நமக்கு கிடைக்கிறது.
*உயிர்களுக்கு உதவாதவர்கள் உலகில் இருந்து பயனில்லை.


பாடல் குறிப்பு

பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு  (எட்டுத்தொகை).பாடலை பாடியவர் இரும்பிடர்த் தலையார் (3).

தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளை பின்பற்றுவோம். தமிழிற்க்கு மேலும் அழகு சேர்ப்போம்.

வளர்க தமிழ்!           வாழ்க தமிழ்!!

எட்டுத்தொகை - அகநானூறு

அகநானூறு

*அகநானூறு - அகம் + நான்கு + நானுறு

*அகம் சார்ந்த பாடல்களை கொண்ட நூல்.

*கடவுள் வாழ்த்து தவிர நானூறு பாடல்களை உடையது.

*அகநானுறுக்கு நெடுந்தொகை என்ற சிறப்பு பெயரும் உண்டு.

*இவை 13 அடிகளை குறைந்த அளவாகவும், 31 அடிகளை அதிகபட்ச அளவாகவும் கொண்டது.

*அகநானூறு எட்டுத்தொகையின் கீழ் தொகுப்பிக்கப்பட்டுள்ளது.

*இவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை உள்ளிட்ட ஐந்து திணைகளுக்கும் பாடப்பட்டுள்ளது.

*இவை மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

*அவை,
             களிற்றியானை நிரை
             மணிமிடை பவளம்
             நித்திலக்கோவை

*களிற்றியானை நிரை 1 முதல் 120 பாடல்களை உள்ளடக்கியது. இப்பகுதி யானைக் களிறு போன்று சிறப்பு பெற்றது.

*மணிமிடை பவளம் 121 முதல் 300 வரையிலான பாடள்களை உள்ளடக்கியது. இப்பகுதி நீலநிறமணி மற்றும் செந்நிற பவளம் போல் சிறப்பு மிக்கது.

*நித்திலக் கோவை 301 முதல் 400 வரையிலான பாடல்களை உள்ளடக்கியது. இப்பகுதி நித்தில முத்து போன்று சிறப்பு மிக்கது.

*தித்தன்
*மத்தி
*நன்னன்
*கரிகாற்பெருவளத்தான்
*தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்
*நெடுஞ்செழியன்

போன்றோர் அகநானூறில் குறிப்பிடப்படும் பெருநில வேந்தர்கள்.

*ஆதன்
*எழினி ஆட்டனத்தி
*அன்னிமிஞிலி
*பாணன்
*பழையன்

போன்றோர் அகநானூறில் குறிப்பிடப்படும் குறுநில வேந்தர்கள்.

*அக்கால அரசர்களின் செல்வ வளத்தை குறிப்பிடும் பொருட்டு அலெக்சான்டாரின் படையெடுப்பின் போது கஞ்சி நந்தர்கள் தங்கள் செல்வ வளங்களை கங்கையாற்றின் அடியில் புதைத்த வரலாற்றை அகநானூறில் - 20 மற்றும் 25 வது பாடல்கள் குறிப்பிடுகிறது.

*சங்க காலத்தில் திருமணம் வாழ்வில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இவற்றை 86, 136 வது பாடல்கள் தெளிவாக விளக்குகிறது.

*தொகையை தொகுப்பித்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மார்.

*தொகுப்பித்தவர் உக்கிரப் பெருவழுதியார்.

*அகநானூறு மொத்தம் 146 புலவர்களால் பாடப்பட்டுள்ளது.

*அகநானூற்றை பாடிய 146 புலவர்களில் 65 புலவர்கள் அகநானூற்று பாடல்களை மட்டுமே பாடியுள்ளனர்.

*1918 ல் "மெட்ராஸ் கம்பர் விலாஸ் புக் டிம்போட் மயிலாபூர்" என்ற பதிப்பகத்தால் முதல் பதிப்பு பதிப்பிக்கப்பட்டது. ஆனால் இதன் முகப்பு பக்கம் மட்டுமே கிடைக்கப்பெற்றது. அகநானூற்றின் முழு பதிப்பும் கிடைத்தது 1923 ல் தான். இதை "அகநானூறு மூலமும் பழைய உரையும்" என்னும் தலைப்பில் ரா.இராகவையங்கார் மற்றும் இராஜகோபாலையங்கார் ஆகியயோர் வெளியிட்டனர்.

*அகநானூறில் 114,117 மற்றும் 165 ஆகிய பாடல்களை படியவர்கள் பெயரை அறியமுடியவில்லை.

கலைச்சொல்

Anemometer - வளிமானி
Knoll - கடற்குன்று
Sift - சலி
Bicuit - மாச்சில்
Fire - அழனம்
Weapon - எஃகம்
Apical - நுனி
Toxicology - நச்சியல்
Survey - அளக்கை
Join - கோ
Bulb - குமிழி
Metropolitan city - அரையம்
Indian basil - கரந்தை
Paper weight - தாளடக்கி
Thalamus - தலைமம்
Mercuy - இதள்
Friendzone - நட்புரப்படுத்து
Droupe - சதைக்கனி
Garden lizard - ஓந்தி
Binder - கட்டகர்
Drift - நகர்வு
Brewery - வடிப்பகம்
Prove - எண்பி
Bunk - பேழங்கு
Screwpine - கைதை
Condenser - செறிகலன்
Cable - வடம்
Buzzer - இமிரி
Squander - அள்ளியிறை
Center of gravity - ஈர்ப்பு மையம்
Ellipse - நீள்வட்டம்
Irreducible - குறுக்கமுடியாத
Bamboo - வேய்
Element - தனிமம்
Canvas - கித்தான்
Beam - கற்றை
Dinosaur - துணுசாரை
Numb - விறை
Equation - சமன்பாடு
Coracle - பஃறி
Compact - கச்சிதமான
Refrigerator - குளிரூட்டி
Backlash - பின்வீச்சு
Electric geyser - சூடூட்டி
Dawn - புலர்
Dividend - ஈவு
Desert - சுரம்
Bond - பிணைப்பு
Tube light - குழல் விளக்கு
Audiology -  கேள்திறனியல்
Kettle - கொதியூட்டி
Hate - புலவு
Cone - கூம்பு
Flame - அழல்
Beaker - முகவை
Washing machine - துவைப்பான்
Acoustic filter - ஒலிவடி
Cake - அணிச்சல்
Shine - துளும்பு
Savoriness - உமாமி
Spring - சுனை
Adhesive - ஒட்டுவிப்பி
Pyramid - பட்டகம்
Accessory - துணைக்கருவி
Hacker - மென்தாக்குநர்
Rest - காலாறு
Aggregation - திரட்சி
Water spray - துவலை
Adaptor - இணக்கி
Probability - நிகழ்தகவு
Accelerometer - முடுக்கமானி
Algorithm - படிமுறை
Stutter - தெற்று
Female teacher - ஐயை
Matrix - அணி
Subtitle - துணைமொழி
Absorbent - உள்ளீர்ப்பி
Raincoat -மழையுடை
Overflow - பிறங்கு
Algebra - இயற்கணிதம்
moisturizer - ஈர்ப்பசைப்பி
Viral - பரபரவல்
Keyboard - விசைப்பலகை
Loop - கண்ணி
Centripetal - மையநோக்கு
Intricate - சிக்கலான
Sensor - உணரி
Frequency - நிகழ்வெண்
Seismology -நிலநடுக்கவியல்
Conductivity - கடத்துமை
Italicface - சாய்வெழுத்து
Queue - சாரை
Normal - இயல்பு
Centrifugal - மையவிலக்கு
Semantics - சொற்பொருளியல்
Rose wood - கருங்காலி
Quantum - குவைய
Boldface - தடித்தெழுத்து
Bolt - மரையாணி
Payload - ஏற்புச்சுமை
Flexibility - நெகிழ்வு
Angle - கோணம்
Bling - பகட்டு
Aerodynamic - காற்றியக்க
Vial - குப்பி
Simmer - முன்கொதிநிலை
Miss - இன்யுணர்
Meme - போன்மி
Digital watch - எண்மக்கடிகை
Abusive - வசை
Pencil - கரிக்கோல்
Digital - எண்ம
Interest - கவனங்கவர்
Vomit - பிளிற்று
Stapler pin - மடக்கூசி
Balcony -உப்பரிகை
Routine - வழமை
Deworming - குடற்புழுநீக்கம்
Worship - எச்சு
Elastis - விரிசுரி
Dog - ஞமலி
Inflation - பணவீக்கம்
Download - தரவிறக்கு
Amplifier - பெருக்கி
To express clearly - கிளத்து
Upload - தரவேற்று
East indian kino tree - வேங்கை
Firefly - ஞலவல்
Tyre - வட்டை
Click - சொடுக்கு
GPS - தடங்காட்டி
Lever - நெம்புகோல்
Decrypt - மறைவிலக்கு
Lift - நகர்தளம்
Iota - இம்மி
Drone -  மின்வண்டு
140.Travelator - நகர்தரை
Touchscreen - தொடுதிரை
Encrypt - மறையாக்கம்
Clamp - பிடியிறுக்கி
Window - சாளரம்
Challenge - அறைகூவல்
Biomass - உயிர்த்திரள்
Jogging - மென்னோட்டம்
Cauliflower - பூவுருளை
Diagnose - நோயறி
Blazer - மிளிருடை
Flag - படாகை
Acidity - புளிமம்
Water - புனல்
Calve - பனிப்பிளவுறு
Neutron - நொதுமி
Charge - மின்னேற்று
Brightness - ஒளிர்வு
Poetry - பா
Date night - உலவிரவு
Hotspot - பகிரலை
Call center - அழைமையம்
Unzip - பற்பிரி
Pornography - கிளர்மம்
Phup - வெட்டுமி
Two wheeler - ஈருருளி
Kleptomania - களவாடற்பித்து
Fascistic - அடக்குவாத
Bachelor - மணமிலி
Tweet - கீச்சிடு
Poster - கவரிகை
Hack - மென் தாக்கு
Motor - விசைப்பொறி
Anthropology - மானுடவியல்
Plogging - பொறுக்கோட்டம்
Uninstall - நிறுவகற்று
Teaser - தூண்டி
Gossip - அலர்
Furniture - அறைக்கலன்
Cement -பைஞ்சுதை
Air conditioner - காற்பதனி
Try - முயல்
Flamingo - பூநாரை
Chewing gum -மெல்லுங்கோந்து
Virus - நச்சுநிரல்
Recent - அண்ம
Whistle - சீழ்கை
Quench - தணி
There - அங்கன்
Accept - ஏல்
Polite - பணிவான
Cymbal - கிணி
Recollect - உன்னு
Near - அணுக்கம்
Pendrive - விரலி
Charity - ஈகை
Falling flower - வீ
Biriyani - ஊண்துவையடிசில்
Bibliomania - நூற்பித்து
Amnesiophilia - மறதியுவகை
Ladle - அகப்பை
Kosmikophobia- அண்டமச்சம்
Myrmecology - எறும்பியல்
Midrib - ஈர்க்கு
Acerophile -புளிப்புவகர்
Inch - விரலம்
Selfi - தாமி
Achluophilia - இருளுவகை
Dejavu - மீணிகழுணர்வு
Frog - நுணல்
Counterphobia - எதிர்மறையச்சம்
Zip - பற்பிணை
Age - அகவை
Ablutophilia - நீராடலுவகை
Moral - படிப்பினை
Binge watch - மீகாண்
Inspection -உண்ணோட்டம்
Logic - ஏரணம்
Shed - கொட்டாரம் / கொட்டகை
ATM / காசாள் கருவி
Balloon - ஊதாம்பி
Carrom - சுண்டாட்டம்
Chapati - கோதடை
Helicopter - உலங்கூர்தி
Loud speaker - ஒலி பெருக்கி
Mike - ஒலி வாங்கி
Popcorn - சோளப்பொறி
Rocket - ஏவுகணை
Courier - தூதஞ்சல்
Marathon - நெட்டோட்டம்
Raincoat - மழைக்குப்பாயம் / மழையாடை
Readymade dress - ஆயுத்த ஆடை
Reception - வரவேற்பு
Relative - உறவினர்
Renewal - புதுப்பித்தல்
Result - முடிவு
Roadroller - சாலை உருளை
Super market - சிறப்பு அங்காடி
Furniture - அறைகலன்கள்
Fashion - புதுப்பாங்கு
Gas stove - வளி அடுப்பு
Kitchen - சமையலறை
Make up - ஒப்பனை
Mimicary - பல்குரல் கலை
Prepaid - முன் கட்டணம்
Tester - ஆய்வுள்ளி
Torch light - வீச்சு விளக்கு
Trolly - தள்ளுவண்டி
Basketball - கூடைப்பந்து
Casual dress - இயல்பு ஆடை
Data - தரவு
Dressing table - ஒப்பனை மிசை
Dressing room - ஒப்பனை அறை
Ear phone - கேள் பொறி
Hand kerchief - கைத்துணி
Indoor game - உள்ளரங்கு விளையாட்டு
Jelly - உறைகூழ் / குழைவு
Sweet corn - இனிப்புச் சோளம்
All rounder - பல்திறனர்
Amplifier - ஒலிபெருக்கி
Arch - வளைவு
Banner - பதாகை
Bread - அப்பம் / வெதுப்பி
Fast food - விரைவு உணவு
Fried rice - வதக்கூண்
Godown - கிடங்கு
Wire - கம்பி / கம்பிவடம்
Wireman - மின்வினைஞர்
Auditorium - கலையரங்கம்
Autograph - நினைவொப்பம் / வாழ்த்தொப்பம்
Batminton - பூப்பந்தாட்டம்
Badge - அணிவில்லை / குறி வில்லை
Boottle - குப்பி / புட்டில்
Breakfast - காலைச் சிற்றுண்டி
Candle - மெழுவர்த்தி
CD - குறுந்தகடு
Fevi kwick - உடனொட்டி
Milk shake - பால் சாறு
Belt - பட்டை / இருப்பு வார்
Calendar - நாள்காட்டி
Flask - சேமச்செப்பு
Grape - கொடிமுந்திரி
Hanger - தொங்கி / கொக்கி
Pine apple - செந்தாழை
Serial light - சரவிளக்கு
Ambulance - மருத்துவ ஊர்தி
Auto - தானி
Battery car - மின்கலச் சீருந்து
Cab - வாடகை உந்து
Car - மகிழுந்து
E-vehicle - மின்னுந்து
Jeep - கரட்டுந்து / வல்லுந்து / ஈப்பு
Lorry - சரக்குந்து / சுமையுந்து
Tractor - உழுவை
Van - மூடுந்து
Camera - ஒளிப்படக்கருவி
Clip - கவ்வி / பற்றி
Passport - கடவுச்சீட்டு
Remote - சேணியக்கி
Ticket - சீட்டு
Visa - நுழைவு இசைவுச் சீட்டு
Window - பலகணி
Xerox - நகல் / ஒளிப்படி
Digital library - மின் நூலகம் / எண்மநூலகம்
E-book - மின்னூல்
E-cycle - மின் மிதிவண்டி
E-publishing - மின்பதிப்பு
E-Wallet - மின் பணப்பை
E-sports - மின் ஆட்டம்
E-piracy - மின் தரவல் திருட்டு
E-mail - மின்னஞ்சல்
E-visa - மின் நுழைவிசைவு
Blood bank - குருதி வைப்பகம்
Immunity - தடுப்பாற்றல்
Mask - முகவுறை
Plaster - மருந்தொட்டி
Stethoscope - துடுப்பு மானி / நாடி மானி
Stretcher - தள்ளுபடுக்கை / தூக்கு படுக்கை
Thermometer - வெப்பமானி
Cooling glass - தண்ணாடி
Fan - மின் விசிறி
Microwave - நுண்ணலை அடுப்பு
Mixie - கலக்கி
Power bank - திறன் தேக்கி
Vacuum cleaner - தூசுறிஞ்சி
Freelancher - சாராவினைஞர்
Persistence of vision - பார்வை நிலைப்பு
Dubbing - ஒலிச்சேர்க்கை
Director - இயக்குநர்
Shooting - படப்பிடிப்பு
Cartoon - கருத்துப்படம்
Negative - எதிர்ச்சுருள்
Microphone - நுண்ணொலிபெருக்கி
Projector - படவீழ்த்தி
Lense - உருப்பெருக்கி
Motion pictures - இயங்குருப்படங்கள்
Aesthetic - இயற்கை வனப்பு, அழகியல்
Biology - உயிர்நூல்
Classical language - உயர்தனிச் செம்மொழி
Green rooms - பாசறை
Instinct - இயற்கை அறிவு
Order of nature - இயற்கை ஒழுங்கு
Snacks - சிற்றுணா
Quarantine - தொற்றொதுக்கம்
Self isolation - தன்னொதுக்கம்
Rust - துருப்பிடி
Jelly fish - நுங்கு மீன்
Recluse - கூடார்
Pearl - அழிவித்து
Arcuate - வில்வடிவ
Smartphone - திறன்பேசி
Touch screen - தொடுதிரை
Bug - பிழை
Gazette - அரசிதழ்
Despatch - அனுப்புகை
Subsidy - நல்கை
Ceiling - உச்சவரம்பு
Circular - சுற்றறிக்கை
Subjunior - மிக இளையோர்
Super senior - மீமூத்தோர்
Carrom - நாலாங்குழி ஆட்டம்
Sales tax - விற்பனை வரி
Customer - நுகர்வோர்
Account - பற்று வரவுக் கணக்கு
Referee - நடுவர்
Pilot - வலவன்
Decimal - தசம முறை
Molecule - மூலக்கூறு
Photosynthesis - ஒளிச்சேர்க்கை
Library - நூலகம்
Librarian - நூலகர்
Library science - நூலக இயல்
Antibiotics - எதிர் உயிர்ப்பொருள்
Member - சபிகன்
Journalist - இதழாளர்
Art critic - கலை விமர்சகர்
Book review - புத்தக மதிப்புரை
Migration - புலம்பெயர்தல்
Philosopher - மெய்யியலாளர்
Organic farming - இயற்கை வேளாண்மை
Chemical fertilizers - வேதி உரங்கள்
Shell seeds - ஒட்டு விதை
Farmyard manure - தொழு உரம்
Value addad product - மதிப்புக்கூட்டுப் பொருள்
Root nodes - வேர்முடிச்சுக்கள்
Weaver bird - தூக்கணங்குருவி
Harvesting - அறுவடை
QR code - விரைவு குறியீடு
Ethnic group - இனக்குழு
Earth environment - புவிச்சூழல்
Ethmological dictionary - வேர்ச்சொல் அகராதி
Prefix - முன்னொட்டு
Suffix - பின்னொட்டு
Cultural elements - பண்பாட்டுக்கூறுகள்
Nerd - வெற்றிவாளி
Tease - எள்ளு
Alkali - காரம்
Annuity - ஆண்டுத்தொகை
Community spread - சமூகத் தொற்று
Social distance - சமூக இடைவெளி
Aesthetic - இயற்கை வனப்பு, அழகியல்
Biology - உயிர்நூல்
Classical language - உயர்தனிச் செம்மொழி
Green rooms - பாசறை
Instinct - இயற்கை அறிவு
Order of nature - இயற்கை ஒழுங்கு
Snacks - சிற்றுணா
Quarantine - தொற்றொதுக்கம்
Self isolation - தன்னொதுக்கம்
Rust - துருப்பிடி
Jelly fish - நுங்கு மீன்
Recluse - கூடார்
Pearl - அழிவித்து
Arcuate - வில்வடிவ
Smartphone - திறன்பேசி
Touch screen - தொடுதிரை
Bug - பிழை
Gazette - அரசிதழ்
Despatch - அனுப்புகை
Subsidy - நல்கை
Ceiling - உச்சவரம்பு
Circular - சுற்றறிக்கை
Subjunior - மிக இளையோர்
Super senior - மீமூத்தோர்
Carrom - நாலாங்குழி ஆட்டம்
Sales tax - விற்பனை வரி
Customer - நுகர்வோர்
Account - பற்று வரவுக் கணக்கு
Referee - நடுவர்
Pilot - வலவன்
Decimal - தசம முறை
Molecule - மூலக்கூறு
Photosynthesis - ஒளிச்சேர்க்கை
Library - நூலகம்
Librarian - நூலகர்
Library science - நூலக இயல்
Antibiotics - எதிர் உயிர்ப்பொருள்
Member - சபிகன்
Journalist - இதழாளர்
Art critic - கலை விமர்சகர்
Book review - புத்தக மதிப்புரை
Migration - புலம்பெயர்தல்
Philosopher - மெய்யியலாளர்
Organic farming - இயற்கை வேளாண்மை
Chemical fertilizers - வேதி உரங்கள்
Shell seeds - ஒட்டு விதை
Farmyard manure - தொழு உரம்
Value addad product - மதிப்புக்கூட்டுப் பொருள்
Root nodes - வேர்முடிச்சுக்கள்
Weaver bird - தூக்கணங்குருவி
Harvesting - அறுவடை
QR code - விரைவு குறியீடு
Ethnic group - இனக்குழு
Earth environment - புவிச்சூழல்
Ethmological dictionary - வேர்ச்சொல் அகராதி
Prefix - முன்னொட்டு
Suffix - பின்னொட்டு
Cultural elements - பண்பாட்டுக்கூறுகள்
Ambiguity - தெளிவின்மை
Bestie - உயிர்த்தோழன்
Lallation - மழலைப்பேச்சு
Fantast - பகற்கனவினவர்
Fancier - வளர்ப்பார்வலர்
Agritourism - வேளாண் உலா
Bashaw - முகாமையர்
Bash - கடுந்தாக்கு
Ace - திறனர்
Adflation - மிகை விளம்பரம்
Rontgentherapy - ஊடுகதிர் மருத்துவம்
Aviarist - புள்ளோம்புநர்
Highlighter - மிளிர்ப்பி
Netizen - இணைய ஆர்வலர்
Smart watch - திறன் கடிகை
Tempered glass - காப்பு ஆடி
Acumen - கூரறிவு
Bibliophil - நூலார்வலன்
Bas relief - குவி ஓவியம்
Ablation zone - பனியரிப்புப் பகுதி
Accidial - அழையா அழைப்பு
Aquarabics - நீர் உடற்பயிற்சி
Sangfroid - உறுதியான மனம்
Ruck walking - சுமைநடை
Sci-fi - அறிவியற்புனைவு
Rococo - மிக ஒப்பான
Service road - கிளைச்சாலை
Screenager - இனையப்பருவத்தினர்
Prognosticate - முற்கூறல்
Youth quake - இளையோர் எழுச்சி
Helicam - உலங்குபதிவி
Cyber war - இணையத்தாக்கு
E - Vehicle - மின்னூர்தி / மின்னுந்து
Hipster - புதுமைவிரும்பி
Fundoscpoe - அகவிழிநோக்கி
Igloo - பனிக்குடில்
Safety belt - சேமவார்
Cineplex - பல்திரை
Buzzkill - ஊக்கமிலி
Kittenfishing - இணையத் தற்புகழ்ச்சி
Cuisinier - அடுநர்
Dox - இணைய அலர்
Mark tapley - மாறா மகிழன்
La-la-land - கற்பனையுலகு
Kidult - மழலை மனத்தர்
Ear tickler - இன்னிசை
Bingewatch - மீகாணல்
Breaking news - தெறிப்புச் செய்தி
Smart card - பன்முகப்பயனட்டை
Jokester - நகைச்சுவை விரும்பி
Onesie - தளருடை
Power point - மின்காட்சியுரை
Froyo - இன்குளிர்த்தயிர்
Cardio walk - நெஞ்சக நலநடை
Look alike - ஒத்த சாயலர்
Freegan - ஒதுக்கூண் உண்போர்
Caugh potato - திரைப்பித்து
Daycation - நாட்செலவு
Gallery - காட்சியகம்
Word capus - சொற்குவை
Accurate - துல்லியமான
Basal rot - வேர் அழுகல்
Biolumini science - உயிரியல் அறிவு
Crack-tryst - சொல்  மாறி
Zipstitch - பல்லிணைத்தையல்
Charger - மின்னூட்டி
Chat - அளாவி
Conference call - கூட்டழைப்பு
Edifice - வானுயர் மாடம்
Internal storage - அகச்சேமிப்பு
Boulevard - நிழற்சாலை
Blowhard - ஊக்கவுரைஞர்
Grandi loquent - வேட்ப மொழிதல்
Capacitor - மின் சீராக்கி
Workaholic - வினை வேட்கையர்
YouTube - வலைகாணொலி /  வலையொலி
Wikipedia - இணையக் களஞ்சியம்
Selfie stick - தாமிக் கோல்
Screw up - உசுப்பேற்றல்
M-sand - செயற்கை மணல்
Zero prevalance - முற்றழிப்பு
Benchmark - திறன் மதிப்பீடு
Baragouin - விளங்கா உரை
Body spray - மெய் மனமூட்டி
Air turbulence - வளிச்சீற்றம்
Logo machy - சொற்போர்
Jest - நகையாடல்
Covidiot - சமூக தொற்றுப் புறக்கணிப்பாளர்
Unsocial state - தனித்திருக்கும் நிலை
Contagloustrate - தொற்று விகிதம்
Pandemicophobia - தொற்று அச்சம்
Deathtoll - இறப்பு விகிதம்
Biocidaldisease - உயிர்க்கொல்லி நோய்
Local transmission - சமுதாயப் பரவல்
Isolation desease - தனிமைப்படுத்தல் நோய்
Ruleviolation cases - நெறி மீறல் வழக்குகள்
Tissuse paper - மென்தாள்
Disinfection - தொற்றகற்றம்
Moratorium - குறுங்காலமுடக்கம்
Epidemic - கொள்ளை நோய்
Sanitizer - தொற்றொழிப்பி
Dis information - புரளி
Incubation period - நோயரும்புங் காலம்
Bacteria - நுண்ணுயிரி
Dissemination - செய்தி பரப்புதல்
Outbreak - திடீர் பரவல்
Rusk - வறளப்பம்
Pizza - பொதியப்பம்
Roast - வறுவல்/முறுகல்
Rose - முளரி
Regulator - சீராக்கி
Ice cream - பனிக்குழை
Iron box - தேய்ப்பு பெட்டி
Apple - அரத்திப்பழம்
Omelette - முட்டையடை
Lunch box - பகல் உணவடம்
Air coller - வளிக்குளிரி
Exhaust fan - வளிபோக்கி
Chalk piece - மாக்கட்டி / சுண்ணக்கட்டி
Generator - மின்னாக்கி
Eraser - அழிப்பான்
Gas cylinder - வளியுருளை
Ink pad - மையேற்றி
Juice - சாறு
Desk - சாய்வுமிசை
Shower bath - பொழிநீர்க் குளியல்
Pencil - கரிக்கோல்
Shoe - மூடணி
Pamphlet - சிற்றேடு
Shaving blade - மழிதகடு
Pen - எழுதுகோல்  / தூவல்
Washing machine - வெளுப்புப் பொறி
Refil - மைக்குழல் / மைநிரம்பி
Wheel chair - சக்கர நாற்காலி
Sketch pen - ஓவியத்தூவல் / வரைதூவல்
Tea - தேநீர்
Coffee - குளம்பிநீர்
Scale - அளவை / அளவுகோல்
Samosa - கறிப்பொதி
Browser - இணைய உலவி
Heater - வெதுப்பி
Hard disk - வன்வட்டு
Straw - உறிஞ்சுகுழல் / வைக்குழல்
Internet - இணையம் / இணையதளம்
Stool - மொட்டான்
Login - உட்புகல் / தொடங்கல்
Logout - வெளிவரல்
Spoon - சிறுகரண்டி / மணிக்கரண்டி
Switch - சொடுக்கி
Memory card - நினைவுச்சில்லு
Sofa - மெத்திருக்கை
Mouse - சட்டி
Tumbler - குவளை
UPS - தடையில்லா மின் வழங்கி
Washbasin - கழுவுதொட்டி
Pendrive - பதிவு கோல்
Battery - மின்கலம்
Calling bell - அழைப்பு மணி
Scanner - வருடி
Cake - வெட்டப்பம்
Escalator - இயங்குபடி / நகரும்படி
Fuse carrier / உருகிழை தாங்கி
Grinder - அரைவைப் பொறி
Nail cuter - உகிர் வெட்டி
Pressure cooker - அழுத்தக்கலம்
Toothpaste - பற்பசை
Chips - சீவரி / சீவல்
Filter - வடிகட்டி
Flat - அடுக்ககம் / அடுக்குமனை
Lunch - பகலுணவு
Plastic - நெகிழி
Plug - செருகி
Rose milk - செம்பால்
Suite case - உடைப்பெட்டி
Water can - நீர்க்கலம்
Walking stick - ஊன்றுகோல் /கைத்தடி

Saturday, April 25, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு (192)

பாடல்:
*******

அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல,
ஓடி உய்தலும் கூடும்மன்;
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே.

                - ஓரேருழவர்

திணை: பொதுவியல் திணை

துறை: பொருண் மொழிக் காஞ்சித் துறை

பாடல் கூறும் நெறி:
*********************

* வாழும் இல்லற வாழ்க்கையானது வேட்டைக்காரன் களர்நிலத்தில் துரத்தும் மான் படும் துன்பம் போல இடர்ப்பாடு உடையதுதான். என்றாலும் அதிலிருந்து அவன் தப்பமுடியாது.

* களர்நிலம் என்பது நேற்றுநிலம். அந்த நிலத்தில் வேடன் ஒருவன் புல்லுண்ணும் புல்வாய் மானை வேட்டையாடத் துரத்துகிறான். அந்த மான் அவனிடமிருந்து தப்பிப் பிழைக்கவும் முடியும்.

* தளையாய் அமைதல் அவனுக்கு மான் களரில் ஓடுவது போன்ற துன்பம். ஒக்கல் வாழ்க்கையால் துன்பம். மனைவி, மக்கள் போன்ற ஒக்கல் வாழ்க்கையால் துன்பம். அவனால் தப்பிப் பிழைக்க முடியவில்லை. ஒக்கல்-வாழ்க்கை அவனுக்குத் தளை. துன்பப் பட்டேனும் அவர்களைக் காப்பாற்றியே ஆகவேண்டும்.

பாடல் குறிப்பு:
***************

இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு (எட்டுத்தொகை). இப்பாடலை இயற்றியவர் ஓரேருழவர். பாடல் எண் 193. இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் புறப்பொருள் சார்ந்தவையாகும்.


தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுவோம். தமிழிற்கு மேலும் அழகு சேர்ப்போம்!

வளர்க தமிழ்!      வாழ்க தமிழ்!

Friday, April 24, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு  (279)

கெடுக சிந்தை; கடிதுஇவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை,
யானை எறிந்து களத்துஒழிந் தனனே;
5 நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்,
பெருநிரை விலங்கி ஆண்டுப்பட் டனனே;
இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப்
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
10 ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுக நோக்கிச் செல்கஎன விடுமே.

                 - ஒக்கூர் மாசாத்தியார்.

திணை : வாகைத்திணை.

துறை : மூதின் முல்லைத் துறை

பாடல் கூறும் நெறி

*பெண் என்பவள் எதற்கும் துணிந்தவள்.
*பெண் என்பவளாள் எதையும் தாங்க இயலும்.
*வாள் எடுத்து வாலறுங்கச் சொன்னாலும் தலை அறுக்கச் சொன்னாலும் தயங்கமட்டாள்.
*பெண்ணால் முடியாதது ஒன்றும் இல்லை.


பாடல் குறிப்பு

பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு  (எட்டுத்தொகை).பாடலை பாடியவர் ஒக்கூர் மாசாத்தியார் (279). இவரது இயற்பெயர் மாசாத்தியார். இவர் ஒக்கூர் என்னும் ஊரைச் சார்ந்தவராதலால் ஒக்கூர் மாசாத்தியார் என்று அழைக்கப்பட்டார். இவர் புறநானூற்றில் இயற்றிய இப்பாடல் மட்டுமல்லாமல், அகநானூற்றில் இரண்டு பாடல்களையும் ( 324, 384), குறுந்தொகையில் ஐந்து பாடல்களையும் (126, 139, 186, 220, 275) இயற்றியுள்ளார்.

தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளை பின்பற்றுவோம். தமிழிற்க்கு மேலும் அழகு சேர்ப்போம்.

வளர்க தமிழ்!           வாழ்க தமிழ்!!

Thursday, April 23, 2020

எட்டுத்தொகை - பரிபாடல்

பரிபாடல் - ஓர் அறிமுகம்

" பரிபா டல்வே தொகைநிலை வகையின்

  இதுபா வென்னும் இயல்நெறி இன்றிப்

  பொதுவாய் நின்றற்கும்  உரித்தென மொழிப "

                          ( தொல். செய் - 425 )

   பரிபாடல் என்பது பா இஃது என்று சொல்லப்படும் இலக்கணம் இன்றி எல்லா பாவிற்கும் பொதுவாய் நிற்கும் என இலக்கணம் வகுக்கிறது தொல்காப்பியம். 

   செவ்வேள், திருமாள், வையை ஆகிய முப்பொருள் பற்றியும் பதின் மூன்று புலவர்கள் பாடியுள்ளனர். எழுவர் பண் வகுத்துள்ளனர்.

  எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய பரிபாடல் அகத்துறையையும் புறத்துறையையும் பாடப்பெற்ற நூலாகும். இப்பாடல் பாடப்பெற்ற ஆண்டு கி.பி மூன்றாம் நூற்றாண்டு எனவும், சிலர் கி.பி ஆறாம் நூற்றாண்டு எனவும் கூறுவர்.

   முதலில் இந்நூலைப் பதிப்பித்தவர்  உ.வே. சாமிநாதர் அவர்கள் ஆவார்.

   இது இருபத்தைந்து அடி சிற்றெல்லையும் நானூறு அடி பேரெல்லையும் கொண்டது.

   பரிபாடல் தெய்வ வணக்கப் பாடல்களாகவே அமைந்துள்ளன. குறிஞ்சிக்கு முருகனையும், முல்லைக்குத் திருமாலையும், பாலைக்குக் கொற்றவை என்னுங் காடு கிழாரையும், மருதத்திற்கு மதுரை மாதெய்வத்தையும், நெய்தல் நீர் தெய்வமான வையையையும் பாடியுள்ளது.


" திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்

  தொருபாட்டுக் காடுகிழாட் கொன்று - மருவினிய

  வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப

  செய்ய பரிபாடல் திறம்."


என்கிறது பழஞ்செய்யுட் பாடல் ஒன்று.

திருமால் - 8
செவ்வேள் - 31
காடு கிழார் - 1
வையை - 26
மதுரை - 4

  ஆக பரிபாடலில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை எழுபது ஆகும். ஆனால் நமக்குக் கிடைத்த பாடல்களின் எண்ணிக்கை 22 பாடல்களே.

கிடைக்கப்பெற்ற பாடல்களின் வரிசையில்,

திருமால் - 6
செவ்வேள் - 8
வையை - 8

ஆகிய இருபத்து இரண்டு ஆகும்.

  இப்பாடல் இனிமை ஏறிய பண்ணிசைத்துக் கருத்தாழம் மிகுச் சொற்களால் இயற்றப்பட்டது.

  இப்பாடல்கள் நயமெழுந்து நற்றமிழ் ஊறித் திளைத்ததால் எழுந்த காதற்காட்சிகளும், உள்ளத்தோடூடல்புரியும் உயிரெறிய காட்சிகளும் அருட்சுவையுங் கலந்து வரும் சொற்கட்டுகளுங் கூடிச் செய்யப்பட்ட அருசுவையாகும். கழக இலக்கியங்களுள் ஒன்றான பரிபாடலின் பாடற்சுவையினை இனிவரும் பதிவுகளில் அடுத்ததடுத்துக் காண்போம்.

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு (191)

பாடல்:
*******

யாண்டுபல வாக , நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்? என வினவுதிர் ஆயின்,
மாண்டஎன் மனைவியோடு, மக்களும் நிரம்பினர்;
யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான், காக்க; அதன்தலை 5
ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.

                - பிசிராந்தையார்

திணை: பொதுவியல் திணை

துறை: பொருண் மொழிக் காஞ்சித் துறை

பாடல் கூறும் நெறி:
*********************

* வடக்கிருந்து உயிர் துறந்துகொண்டிருந்த தன் நண்பன் கோப்பெருஞ்சோழனுடன் தானும் வடக்கிருந்து உயிர் துறக்க வந்திருந்த பிசிராந்தையாரிடம் வாழ்நாள் பலவாகியும் மயிர் நரைக்காமல் இருப்பதற்கான காரணத்தை அங்கிருந்தோர் வினவினர்.

* அதற்கான காரணத்தைப் புலவர் பிசிராந்தையார் விளக்குகிறார். என் மனைவியும் மக்களும் மாண்புடையவர்கள். நிறைகுடம் போல நிரம்பிய உள்ளம் கொண்டவர்கள். என் தம்பிமாரும் என்னைப் போலவே இருக்கின்றனர்.

*என் அரசனும் அறம் அல்லாத செயல்களைச் செய்யாமல் அனைவரையும் காப்பாற்றுகிறான். எல்லாவற்றிற்கும் மேலாக, என் ஊரில் இருப்பவர்கள் அனைவரும் அறிவு நிறைந்து அதனைப் பகட்டாக்கிக் காட்டாமல் அடக்கமாக வைத்துக்கொண்டு கோட்பாட்டில் சான்றோராய் வாழ்கின்றனர். எனவே எனக்குக் கவலை என்பதே இல்லை. எனவே எனக்கு நரை இல்லை.

பாடல் குறிப்பு:
***************

இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு (எட்டுத்தொகை). இப்பாடலை இயற்றியவர் பிசிராந்தையார். பாடல் எண் 191. இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் புறப்பொருள் சார்ந்தவையாகும்.


தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுவோம். தமிழிற்கு மேலும் அழகு சேர்ப்போம்!

வளர்க தமிழ்!      வாழ்க தமிழ்!

Wednesday, April 22, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு (190)

பாடல்:
*******

விளைபதச் சீறிடம் நோக்கி, வளைகதிர்
வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும்
எலிமுயன் றனைய ராகி, உள்ளதம்
வளன்வலி உறுக்கும் உளம் இலாளரோடு
இயைந்த கேண்மை இல்லா கியரோ!
கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென,
அன்று அவண் உண்ணா தாகி, வழிநாள்,
பெருமலை விடரகம் புலம்ப, வேட்டெழுந்து,
இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும்
புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து
உரனுடை யாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உளவா கியரோ!


                - சோழன் நல்லுருத்திரன்

திணை: பொதுவியல் திணை

துறை: பொருண் மொழிக் காஞ்சித் துறை

பாடல் கூறும் நெறி:
*********************

* எலி போன்றோர் நட்பு கூடாது. புலி போன்றோர் நட்பு வேண்டும் என்கிறான்.

* எலி: நன்கு விளைந்திருக்கும் காலத்தில் நெல்-மணிக் கதிர்களைக் கொண்டுபோய்த் தன் வளையில் பதுக்கிக்கொள்ளும் எலி போன்றோர் நட்பு வேண்டாம்.

* புலி தான் கவ்விய காட்டுப் பன்றி தன் இடப்பக்கமாக விழுந்தது என்பதற்காக அதனை உண்ணாமல் பட்டினிக் கிடந்து மறுநாள் யானை வேட்டைக்கு முயலும் புலி போல் துணிவும், நெஞ்சுரமும் கொண்ட மானமுள்ளவர் நட்பு வேண்டும்

பாடல் குறிப்பு:
***************

இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு (எட்டுத்தொகை). இப்பாடலை இயற்றியவர் சோழன் நல்லுருத்திரன். பாடல் எண் 190. இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் புறப்பொருள் சார்ந்தவையாகும்.


தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுவோம். தமிழிற்கு மேலும் அழகு சேர்ப்போம்!

வளர்க தமிழ்!      வாழ்க தமிழ்!

Tuesday, April 21, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு  (2)

மண் திணிந்த நிலனும்,
நிலம் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு 5
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்
வலியும், தெறலும், அணியும், உடையோய்!
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும் 10
யாணர் வைப்பின், நன்னாட்டுப் பொருந!
வான வரம்பனை! நீயோ, பெரும!
அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ,
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருது, களத்து ஒழியப் 15
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி,
நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச், 20
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை,
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கிற், றுஞ்சும்
பொற்கோட்டு இமயமும், பொதியமும், போன்றே!


               - முரஞ்சியூர் முடிநாகராயர்.

திணை : பாடாண்திணை

துறை : செவியறிவுறூஉ துறை

பாடல் கூறும் நெறி

*மலை அளவு பொறுமை வேண்டும்.
* நிறைந்த செல்வமோ அல்லது குறைவான செல்வமோ கொண்டாலும் பிறற்கு உதவி செய்ய வேண்டும்.
*அது நம் மக்களை துளியும் துன்பம் வரமால் காக்கும்.
*இதுவே பெரிதும் நன்மை பயக்கும்.

பாடல் குறிப்பு

பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு  (எட்டுத்தொகை).
பாடலை இயற்றியவர் முரஞ்சியூர் முடிநாகராயர்.
 பாடல் எண் 2. சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் மீது பாடப்பட்டது.

தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளை பின்பற்றுவோம். தமிழிற்க்கு மேலும் அழகு சேர்ப்போம்.

வளர்க தமிழ்!           வாழ்க தமிழ்!!

Monday, April 20, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு (189)

பாடல்:
*******

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி ; உடுப்பவை இரண்டே; 5
பிறவும் எல்லாம் ஓரொக் குமே;
அதனால், செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.

                - மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்

திணை: பொதுவியல் திணை

துறை: பொருண் மொழிக் காஞ்சித் துறை

பாடல் கூறும் நெறி:
*********************

* ஒருவன் தெளிந்த கடல் சூழ்ந்திருக்கும் உலகம் அனைத்தையும் பிறருக்கு உரிமை இல்லாமல் தனக்கே உரியதாய் தன் வெண்கொற்றக் குடைக்கீழ்க் கொண்டுவந்து ஆண்டு அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.

* மற்றொருவன் பகல் இரவு என்று பாராமல் நள்ளிரவிலும் உணவுக்கு வேட்டையாட விலங்கினைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். என்று வைத்துக்கொள்வோம்.

* யாராய் இருந்தால் என்ன? அவன் உண்பது ஒரு படி உணவு. உடுத்திருப்பவை மேலாடை, கீழாடை என்று இரண்டே துணி. பிறவற்றை எண்ணிப் பார்த்தாலும் இருவர் நுகர்வும் ஒன்றாகவே உள்ளது.

* அப்படி இருக்கும்போது செல்வத்தைச் சேர்த்துவைத்து என்ன செய்யப் போகிறோம்.

*துய்க்கலாம் என்றால் மிஞ்சித் தப்பிவிடுமே. அதனால் செல்வத்துப் பயன் ஈதல் ஒன்றே.



பாடல் குறிப்பு:
***************

இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு (எட்டுத்தொகை). இப்பாடலை இயற்றியவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார். பாடல் எண் 189. இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் புறப்பொருள் சார்ந்தவையாகும்.


தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுவோம். தமிழிற்கு மேலும் அழகு சேர்ப்போம்!

வளர்க தமிழ்!      வாழ்க தமிழ்!

Sunday, April 19, 2020

எட்டுத்தொகை - ஐங்குறுநூறு

எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றான ஐங்குறுநூறு நூலினைப் பற்றிய தகவல்கள்:

ஐங்குறுநூறு
**************

ஐந்து + குறு = ஐந்திணைகளைக்குறித்த குறும்பாடல்கள்

ஐந்து + நூறு = 500 பாடல்களைக்கொண்டது.


 இந்நூலானது ஐந்திணையில் உள்ள அரசனையும் மக்களையும் அவர்களது சிறப்புகளையும்  கூறும் நூலாகும்....



இந்த நூலில் உள்ள பாடல்கள் குறைந்த அளவாக *மூன்று அடிகளும்*
 உயர்ந்த அளவாக *ஆறு அடிகளும்* கொண்டவை.

 இந்நூல் 500 குறும்பாடல்களால் ஆனது.

ஒவ்வொரு திணைக்கும் *நூறு* பாடல்கள் உள்ளன.

 ஒவ்வொன்றையும் ஒவ்வொருவர் பாடியுள்ளனர்.

 ஒவ்வொரு *நூறுபாடல்களும்  பத்துப் பத்துக்களைக்* கொண்டுள்ளது.


 ஒவ்வொரு பத்தும் ஒரு பெயர் பெறுவது சிறப்பு.

( கருப்பொருள், உரிப்பொருள், பேசும் பாத்திரம், கேட்கும் பாத்திரம் முதலியவற்றுள் ஏதேனும் ஒன்று அப்பெயர்க்கு அடிப்படையாக அமையும். )


இதற்கும் பாரதம் பாடிய பெருந்தேவனார் *கடவுள் வாழ்த்து* இயற்றியுள்ளார்.

 இதனைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய *கூடலூர்கிழார்* .

 தொகுப்பித்தவர் *யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை* என்பவர்.

 இதன் 129, 130 ஆம் செய்யுட்கள் ( பாடல்கள் ) கிட்டவில்லை.

இதில் மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்ற முறையில் திணைகள் கோக்கப்பட்டுள்ளன.


இதனை இயற்றியோர் பற்றிய விவரம் வருமாறு:

மருதம் - ஓரம்போகியார்

நெய்தல் - அம்மூவனார்

குறிஞ்சி - கபிலர்

பாலை - ஓதலாந்தையார்

முல்லை - பேயனார்



இதில் பல புதுமைகள் உண்டு.

இதில் தொண்டிப்பத்து என்னும் பகுதி *அந்தாதியாகவுள்ளது* .


 மேலும் இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், பாங்கியிற் கூட்டம் என்ற கிளவிகளும் ( சொற்களும் ) தொடர்ச்சியாக உள்ளன.


இதில் உள்ளுறையும் இறைச்சியும் மிகுதி. அவ்வாறே புதிய கிளவிகளும் பலவாக அமைந்துள்ளன.


ஒரு **குறிப்பிட்ட அரசனை வாழ்த்திப் பாடும்*  போக்கை இந்நூலில் மட்டுமே காண முடியும்.

‘ **வாழி ஆதன் வாழி அவினி!* ’ என்ற அடி
 பாடல்தோறும் இடம் பெறலை வேட்கைப் பத்தில் காணலாம்.



நாட்டில் பசியும் பிணியும், வறுமையும், அறமற்ற செயல்களும் இல்லாது ஒழியவும்,
 அன்பும் அறமும், ஒழுக்கமும், செல்வ வளமும் பெருகவேண்டும் **என
 வேண்டும் பெண்களை** இந்நூலிலன்றி வேறெதிலும் காண முடியாது.

எ.கா ;


தன் கணவன் ஊரில் ( பாலை நிலத்தில் ) உள்ள கிணற்றடியில் கிடக்கும் *அழுகல் நீர்* , தன் தாய் வீட்டில்
தான் உண்ட தேன்கலந்த *பாலை விட* இனிமையாகக் கருதும் பெண்ணைக்
 *கபிலர்* அறிமுகப்படுத்துகின்றார்.
( பாடல் : 203 )

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு (188)

பாடல்:
*******

படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் - தாம் வாழும் நாளே.

                - பாண்டியன் அறிவுடை நம்பி

திணை: பொதுவியல் திணை

துறை: பொருண் மொழிக் காஞ்சித் துறை

பாடல் கூறும் நெறி:
*********************

* வாழ்நாளின் பயன் தன் குறையாகப் பிறக்கும் குழந்தைச் செல்வம்.

* எல்லாச் செல்வப் பேறுகளையும் படைத்து அவற்றைப் பலரோடு கூடி உண்ணும் பெருஞ்செல்வர் ஆயினும் அந்தக் குழந்தைச் செல்வம் இல்லை என்றால் பயன் இல்லை.

* பலரோடு கூடி உண்ணும்போது இடையிலே குழந்தை சின்னச்சின்ன அடி வைத்து நடந்துவந்து கையை நீட்டித், தான் உண்ணும் உணவில் கையை வைத்து, அதே கையால் தன்னையும், தன் தாய்தந்தையரையும் தொட்டு, வாயால் சோற்றைக் கவ்வி, கையை விட்டுத் துளாவி, நெய் மணக்கும் சோற்றைத் தன் மேனியிலும், தன் பெற்றோர் மேனியிலும் உதிர்த்துக்கொண்டு எல்லாரையும் மயக்கும் பாங்கினது அந்தக் குழந்தைச் செல்வம்.


பாடல் குறிப்பு:
***************

இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு (எட்டுத்தொகை). இப்பாடலை இயற்றியவர் பாண்டியன் அறிவுடை நம்பி. பாடல் எண் 188. இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் புறப்பொருள் சார்ந்தவையாகும்.


தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுவோம். தமிழிற்கு மேலும் அழகு சேர்ப்போம்!

வளர்க தமிழ்!      வாழ்க தமிழ்!

Saturday, April 18, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு (187)

பாடல்:
*******

நாடா கொன்றோ ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே!

                - ஔவையார்

திணை: பொதுவியல் திணை

துறை: பொருண் மொழிக் காஞ்சித் துறை

பாடல் கூறும் நெறி:
*********************

* நாடாய் இருந்தால் என்ன?
காடாய் இருந்தால் என்ன?
பள்ளமாய் இருந்தால் என்ன?
மேடாய் இருந்தால் என்ன?

* எங்கே ஆண்கள் நல்லவர்களாக இருக்கிறார்களோ அந்த நிலம் வாழ்வதற்கு உரிய நல்ல இடம்.

பாடல் குறிப்பு:
***************

இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு (எட்டுத்தொகை). இப்பாடலை இயற்றியவர் ஔவையார். பாடல் எண் 187. இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் புறப்பொருள் சார்ந்தவையாகும்.


தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுவோம். தமிழிற்கு மேலும் அழகு சேர்ப்போம்!

வளர்க தமிழ்!      வாழ்க தமிழ்!

Friday, April 17, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு (186)

பாடல்:
*******

நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால், யான்உயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.

                - மோசிகீரனார்

திணை: பொதுவியல் திணை

துறை: பொருண் மொழிக் காஞ்சித் துறை

பாடல் கூறும் நெறி:
*********************

* மக்கள் நெல்மணிகளையும் நீரையும் உண்டு வாழ்பவர்கள் தான், என்றாலும் அந்த நெல்லும் அவர்களுக்கு உயிர் அன்று. நீரும் உயிர் அன்று. (அவை உடல்).

* மன்னன் தான் அவர்களுக்கு உயிர். ஒவ்வொரு மன்னனும் தான்தான் மக்களுக்கு உயிர் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்

பாடல் குறிப்பு:
***************

இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு (எட்டுத்தொகை). இப்பாடலை இயற்றியவர் மோசிகீரனார். பாடல் எண் 186. இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் புறப்பொருள் சார்ந்தவையாகும்.


தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுவோம். தமிழிற்கு மேலும் அழகு சேர்ப்போம்!

வளர்க தமிழ்!      வாழ்க தமிழ்!

Thursday, April 16, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு  (400)
         
பாடல்

மாசு விசும்பின் வெண் திங்கள்
மூ வைந்தான் முறை முற்றக்,
கடல் நடுவண் கண்டன்ன என்
இயம் இசையா, மரபு ஏத்திக்
கடைத் தோன்றிய கடைக் கங்குலான்
5
பலர் துஞ்சவும் தான் துஞ்சான்,
உலகு காக்கும் உயர் கொள்கை,
கேட்டோன், எந்தை என் தெண்கிணைக் குரலே;
கேட்டற் கொண்டும், வேட்கை தண்டாது:
தொன்றுபடு சிதாஅர் மருங்கு நீக்கி, 10
மிகப் பெருஞ் சிறப்பின் வீறுசால் நன்கலம்
. . . . . . . . . . லவான
கலிங்கம் அளித்திட்டு என்அரை நோக்கி,
நாரரி நறவின் நாள்மகிழ் தூங்குந்து;
போ தறியேன், பதிப் பழகவும், 15
தன்பகை கடிதல் அன்றியும், சேர்ந்தோர்
பசிப்பகை கடிதலும் வல்லன் மாதோ;
மறவர் மலிந்ததன் . . . . .
கேள்வி மலிந்த வேள்வித் தூணத்து,
இருங்கழி இழிதரும் ஆர்கலி வங்கம் 20
தேறுநீர்ப் பரப்பின் யாறுசீத்து உய்த்துத்,
துறைதொறும் பிணிக்கும் நல்லூர்,
உறைவின் யாணர் , நாடுகிழ வோனே!

               - கோவூர் கிழார்

திணை : பாடாண்திணை

துறை : இயன்மொழிதுறை

பாடல் கூறும் நெறி

*அரசன் தனது கடமையான மக்களை காக்கும் பணியை செவ்வென செய்ய வேண்டும்.
*தன்னை மகிழ்விக்கும் கலைஞர்களுக்கு தக்க பரிசுகளை வழங்க வேண்டும்.
*தனது பரிசுகளால் அவன் முகத்தில் தோன்றும் சிரிப்பை கண்டு மகிழ வேண்டும்
*மக்களை காப்பதையே வாழ்வென கொண்டு வாழ்தல் வேண்டும்.
*இவை அரசு பணியாளர்களுக்கும்,பொது நலன் கருதி வாழ்வோர்க்கும் பொருந்தும்.

பாடல் குறிப்பு

பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு  (எட்டுத்தொகை).
பாடலை இயற்றியவர் கோவூர் கிழார். பாடப்பட்டோன் சோழன் நலங்கிள்ளி.பாடல் எண் 400.

தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளை பின்பற்றுவோம். தமிழிற்க்கு மேலும் அழகு சேர்ப்போம்.

வளர்க தமிழ்!           வாழ்க தமிழ்!!

Wednesday, April 15, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு (185)

பாடல்:
*******

கால்பார் கோத்து, ஞாலத்து இயக்கும்
காவற் சாகாடு உகைப்போன் மாணின்,
ஊறுஇன்றாகி ஆறுஇனிது படுமே;
உய்த்தல் தேற்றான் ஆயின், வைகலும்,
பகைக்கூழ் அள்ளற் பட்டு,
மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே.

                - தொண்டைமான் இளந்திரையன்

திணை: பொதுவியல் திணை

துறை: பொருண் மொழிக் காஞ்சித் துறை

பாடல் கூறும் நெறி:
*********************

* காவல்-சாகாடு என்பது உலகினைக் காப்பாற்றி ஓட்டிச்செல்லும் ஒரு வண்டி.

* கைப்போன் என்பவன் அதனைக் கைக்கொண்டு ஓட்டிச் செல்லும் அரசன்.

* கால் என்பது சக்கரம். பார் என்பது வண்டியின் பார். சக்கரத்தை வண்டியில் கோத்து ஞாலம் என்னும் தேரை இயக்குவது ‘காவல்-சாக்காடு’.

* காலத்தைத் தன் மேற்பார்வையில் கோத்து வைத்துக்கொண்டு ஆட்சி-வண்டியை ஓட்டுபவன்.

* ஆள்வோன் திறம் பெற்றவனாக இருக்க வேண்டும் என்கிறான் இந்த அரசன்.

பாடல் குறிப்பு:
***************

இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு (எட்டுத்தொகை). இப்பாடலை இயற்றியவர் தொண்டைமான் இளந்திரையன். பாடல் எண் 185. இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் புறப்பொருள் சார்ந்தவையாகும்.


தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுவோம். தமிழிற்கு மேலும் அழகு சேர்ப்போம்!

வளர்க தமிழ்!      வாழ்க தமிழ்!

Tuesday, April 14, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு (184)

பாடல்:
*******

காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே,
மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம்போலத்,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.

                 - பிசிராந்தையார்

திணை: பாடாண் திணை

துறை: செவியறிவுறூஉ துறை

பாடல் கூறும் நெறி:
*********************

* ஒரு குறிப்பிட்ட நிலத்தில் முற்றிக் காய்ந்திருக்கும் நெல்லை அறுத்து அரிசி உணவுக் கவளமாக்கி யானைக்குத் தந்தால் அது பல நாட்களுக்கு வரும்.

* அதே நிலத்தில் யானை புகுந்து உண்டால் அதன் வாயில் புகும் உணவைக் காட்டிலும் காலால் மிதித்து வீணாக்கும் நெல் அதிகமாக அழியும்.

* இந்த உண்மை நெறியை அறிந்து அறிவுடை அரசன் வரி வாங்கும்போது நாட்டின் செல்வம் கோடி கோடியாகப் பெருகும்.

பாடல் குறிப்பு:
***************

இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு (எட்டுத்தொகை). இப்பாடலை இயற்றியவர் பிசிராந்தையார். பாடல் எண் 184. இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் புறப்பொருள் சார்ந்தவையாகும்.


தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுவோம். தமிழிற்கு மேலும் அழகு சேர்ப்போம்!

வளர்க தமிழ்!      வாழ்க தமிழ்!தமிழ் காட்டும் நெறி

Monday, April 13, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு  (183)
         
பாடல்

உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்,
பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே!
பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்,
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்,மூத்தோன் வருக என்னாது, அவருள்
அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்;
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே,

               - ஆரிய படை கடந்த நெடுஞ்செழியன்

திணை : பொதுவியல்திணை

துறை : பொருண்மொழி காஞ்சித் துறை

பாடல் கூறும் நெறி

*ஆசிரியருக்குத் துன்பம் நேரும்போது உதவ வேண்டும்.
*அவருக்கு நிறைந்த செல்வம் கொடுக்கவேண்டும்.
*அவரைப் பின்பற்றி நடப்பதற்குத் தயங்கக் கூடாது.
*இப்படிக் கல்வி கற்பது முறையாகும்.
*இதுவே பெரிதும் நன்மை பயக்கும்.

பாடல் குறிப்பு

பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு  (எட்டுத்தொகை).
பாடலை இயற்றியவர்  ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்.
 பாடல் எண் 183.

தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளை பின்பற்றுவோம். தமிழிற்க்கு மேலும் அழகு சேர்ப்போம்.

வளர்க தமிழ்!           வாழ்க தமிழ்!!

சங்கம் குறிப்பிடும் மலர்கள்

சங்ககாலம் நமக்கு பல்வேறு செய்திகளை அளிக்கிறது அதில் பெண்கள் தலையில் ஏற்றும் மலர்களை பற்றி அருமையாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது அதன் தொகுப்பிங்கு தொகுத்தளிக்கப்பட்டுள்ளது.


மலர்களின் பருவநிலைத் தமிழ்ப்பெயர்களின் தொகுப்பு

1.அரும்பு - அரும்பும் (தோன்றும்) நிலை
2.நனை - அரும்பு வெளியில் நனையும் நிலை
3.முகை - நனை முத்தாகும் நிலை
4.மொக்குள் - "முகை மொக்குள் உள்ளது நாற்றம்" - திருக்குறள் (நாற்றத்தின் உள்ளடக்க நிலை)
5.முகிழ் - மணத்துடன் முகிழ்த்தல்
6.போது - மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை
7.மலர் - மலரும் பூ
8.பூ - பூத்த மலர்
9.வீ - உதிரும் பூ
10.பொதும்பர் - பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை
11.பொம்மல் - உதிர்ந்து கிடக்கும் புதுப்பூக்கள்
12.செம்மல் - உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை

குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடும் மலர்கள் தொகு
குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள மலர்கள் (எதிரில் உள்ள எண் அம்மலர் பாடலில் பயின்றுவந்துள்ள அடியைக் குறிக்கும்)

அ வரிசை தொகு
1. அடும்பு 87
2. அதிரல் 75
3. அவரை - நெடுங்கொடி அவரை 87
4. அனிச்சம் 62
5. ஆத்தி - அமர் ஆத்தி 87
6. ஆம்பல் 62
7. ஆரம் 93
8. ஆவிரை - விரிமலர் ஆவிரை 71
9. இருள்நாறி - நள்ளிருள் நாறி 94
10. இலவம் 86
11. ஈங்கை 86
12. உந்தூழ் - உரி நாறு அமிழ்து ஒத்து உந்தூழ் 65
13. எருவை 68
14. எறுழம் - எரிபுரை எறுழம் 66
க வரிசை தொகு
15. கண்ணி - குறு நறுங் கண்ணி 72
16. கரந்தை மலர் 76
17. கருவிளை - மணிப்பூங் கருவிளை 68
18. காஞ்சி 84
19. காந்தள் - ஒண்செங் காந்தள் 62
20. காயா - பல்லிணர்க் காயா 70
21. காழ்வை 93
22. குடசம் - வான் பூங் குடசம் 67
23. குரலி - சிறு செங்குரலி 82
24. குரவம் - பல்லிணர்க் குரவம் 69
25. குருக்கத்தி - பைங் குருக்கத்தி 92
26. குருகிலை (குருகு இலை) 73
27. குருந்தம் (மலர்) - மாயிருங் குருந்தம் 95
28. குவளை (மலர்) - தண்கயக் குவளை 63
29. குளவி (மலர்) 76
30. குறிஞ்சி 63
31. கூவிரம் 66
32. கூவிளம் 65
33. கைதை 83
34. கொகுடி - நறுந்தண் கொகுடி 81
35. கொன்றை - தூங்கு இணர்க் கொன்றை 86
36. கோங்கம் - விரிபூங் கோங்கம் 73
37. கோடல் 83
ச வரிசை தொகு
38. சண்பகம் - பெருந்தண் சண்பகம் 75
39. சிந்து (மலர்) 89 (சிந்துவாரம்)
40. சுள்ளி மலர் 66
41. சூரல் 71
42. செங்கோடு (மலர்) 64
43. செம்மல் 82
44. செருந்தி 75
45. செருவிளை 68
46. சேடல் 82
ஞ வரிசை தொகு
47. ஞாழல் 81
த வரிசை தொகு
48. தணக்கம் (மரம்) - பல்பூந் தணக்கம் 85
49. தளவம் 80
50. தாமரை - முள் தாள் தாமரை 80
51. தாழை மலர் 80
52. திலகம் (மலர்) 74
53. தில்லை (மலர்) - கடி கமழ் கடிமாத் தில்லை 77
54. தும்பை 90
55. துழாஅய் 90
56. தோன்றி (மலர்) - சுடர் பூந் தோன்றி 90
ந வரிசை தொகு
57. நந்தி (மலர்) 91
58. நரந்தம் 94
59. நறவம் 91
60. நாகம் (புன்னாக மலர்) 91
61. நாகம் (மலர்) 94
62. நெய்தல் (நீள் நறு நெய்தல்) 79
63. நெய்தல் (மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்) 84
ப வரிசை தொகு
64. பகன்றை 88
65. பசும்பிடி 70
66. பயினி 69
67. பலாசம் 88
68. பாங்கர் (மலர்) 85
69. பாதிரி - தேங்கமழ் பாதிரி 74
70. பாரம் (மலர்) 92
71. பாலை (மலர்) 77
72. பிடவம் 78
73. பிண்டி - பல் பூம் பிண்டி 88
74. பித்திகம் 89
75. பீரம் 92
76. புன்னை - கடியிரும் புன்னை 93
77. பூளை - குரீஇப் பூளை 72
78. போங்கம் 74
ம வரிசை தொகு
79. மணிச்சிகை 64
80. மராஅம் 85
81. மருதம் 73
82. மா - தேமா 64
83. மாரோடம் - சிறு மாரோடம் 78
84. முல்லை - கல் இவர் முல்லை 77
85. முல்லை 78
86. மௌவல் 81
வ வரிசை தொகு
87. வகுளம் 70
88. வஞ்சி 89
89. வடவனம் 67
90. வழை மரம் - கொங்கு முதிர் நறுவழை
91. வள்ளி 79
92. வாகை 67
93. வாரம் 89
94. வாழை 79
95. வானி மலர் 69
96. வெட்சி 63
97. வேங்கை 95
98. வேரல் 71
99. வேரி மலர் 64

சிலப்பதிகாரம் தொகுத்துக் குறிப்பிடும் மலர்கள் தொகு
வைகை ஆற்று மணலில் பல்வகை மலர்கள் உதிர்ந்து கிடந்தன. இந்தத் தோற்றம் மகளிர் தம் இடையில் ஆடையின் மேல் அணியும் மேகலையில் பதிக்கப்பட்டுள்ள பல்வண்ண மணிகள் போல இருந்தது என்கிறார் இளங்கோவடிகள்.[1] இங்கு 23 மலர்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றின் அகரவரிசை.

புதிய மலர்கள்

ஓங்கல் மலர், குருகு, கூதாளம், வெண்கூதாளம், பாடலம், மயிலை, மருதம், முசுண்டை, வெதிரம்

சிலப்பதிகாரம் தொகுத்துக் குறிப்பிடும் மலர்கள் தொகு
வைகை ஆற்று மணலில் பல்வகை மலர்கள் உதிர்ந்து கிடந்தன. இந்தத் தோற்றம் மகளிர் தம் இடையில் ஆடையின் மேல் அணியும் மேகலையில் பதிக்கப்பட்டுள்ள பல்வண்ண மணிகள் போல இருந்தது என்கிறார் இளங்கோவடிகள்.[1] இங்கு 23 மலர்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றின் அகரவரிசை.

புதிய மலர்கள்

ஓங்கல் மலர், குருகு, கூதாளம், வெண்கூதாளம், பாடலம், மயிலை, மருதம், முசுண்டை, வெதிரம்

மணிமேகலை தொகுத்துக்கூறும் மலர்கள் தொகு
மணிமேகலை 3 மலர்வனம் புக்க காதையில் புகார் நகரத்து வளர்ப்புப் பூங்காவில் இருந்த மலர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. மணிமேகலையின் சேவடி நிலத்தில் படாமல் இந்த மலர்கள் தாங்கிக்கொண்டனவாம். அவை இங்கு அகர வரிசையில் தரப்படுகின்றன.

குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள மலர்கள்

(கொழும்பல்) அசோகம், வெதிரம்


குறிஞ்சிப்பாட்டில் கூறப்படாத மலர்கள்

இலவம் - எரிமலர் இலவம், குடசம், குரவம், குருந்து, கொன்றை, சண்பகம் – பெருஞ்சண்பகம், செருந்தி, தளவம், தாழை - முடமுள் தாழை, திலகம், நரந்தம், நாகம், பிடவம், புன்னை - பரந்து அலர் புன்னை, மரவம், வகுளம், வெட்சி - செங்கால் வெட்சி, வேங்கை

பரிபாடல் 11-ல் சில மலர்களின் தன்மைகள் விளக்கப்பட்டுள்ளன. தொகு
1. கணவிரி
2. காந்தள்
3. சண்பகம் (வண்டு அறைஇய சண்பகம்)
4. சுரபுன்னை (கரையன சுரபுன்னை)
5. தோன்றி (காந்தள் தாய தோன்றி தீயென மலரும்)
6. நீலம் மலர் (ஊதை அவிழ்ந்த உடையிதழ் ஒண்ணீலம்)
7. புன்னாகம் (வரையன புன்னாகம்)
8. மாமரம் (தண்பத மனைமாமரம்)
9. வாள்வீரம்
10. வேங்கை (சினைவளர் வேங்கை)
பரிபாடல் 12 தொகுத்துக் கூறும் மலர்கள் தொகு
பரிபாடல் எண் 12-ல் வையையாற்றுக் கரையில் மணக்கும் மலர்கள் சில தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. அவை.

இவற்றில் குறிஞ்சிப்பாட்டில் கூறப்படாத மலர்கள்
அரவிந்தம்,[2] அல்லி, கழுநீர், குல்லை, சுரபுன்னை, மல்லிகை
குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்ட மலர்கள்
ஆம்பல், குருக்கத்தி, சண்பகம் - மணங்கமழ் சண்பகம், நறவம், நாகம்- நல்லிணர் நாகம், பாதிரி, மௌவல், வகுளம்,

இளவேனிலில் மலரும் பூக்கள் என்று ஐங்குறுநூறு என்னும் நூலில் சில பூக்கள் தொகுத்துக் காட்டப்பட்டுள்ளன. – பாடல் எண் 341-357

அதிரல் – ஐங்குறுநூறு 345
எரிக்கொடி – ஐங்குறுநூறு 353
காயா, ஐங்குறுநூறு 412
குரவம் - ஐங்குறுநூறு 357
கொன்றை, ஐங்குறுநூறு 412
கோங்கம் – ஐங்குறுநூறு 343
தளவம் ஐங்குறுநூறு 412
நுணவம் – ஐங்குறுநூறு 342
நெய்தல், ஐங்குறுநூறு 412
பலா – ஐங்குறுநூறு 351
பாதிரி – ஐங்குறுநூறு 346
பிடவு ஐங்குறுநூறு 412
புன்கு – ஐங்குறுநூறு 347
மரவம் - ஐங்குறுநூறு 357
மராஅம் – ஐங்குறுநூறு 348
மா – ஐங்குறுநூறு 349
முல்லை ஐங்குறுநூறு 412
வேம்பு - ஐங்குறுநூறு 350

பிற்கால ஔவையார் கொட்டி, அம்பல் நெய்தல் ஆகிய பூக்கள் வெவ்வேறு என்கிறார்.[3]
நாலடியார் நூல் தரும் செய்தி
நீரில் மிதக்கும் பூக்களில் குவளை மக்களுக்கு உதவும் நீர்மை(நல்லொழுக்கம்) கொண்ட மேன்மக்கள் போன்ற பூ என்றும், ஆம்பல் மக்களுக்கு உதவாத நீர்மை இல்லாதவர் போன்ற பூ என்றும் நாலடியார் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது.[4]
நெய்தல், கொட்டி ஆகிய மலர்களை மகளிர் சூடிக்கொள்வர் என்கிறது ஒரு பாடல்

[3]
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு. - ஔவையார் – மூதுரை - 17

[4]
ஒரு நீர்ப் பிறந்து, ஒருங்கு நீண்டக்கடைத்தும், விரி நீர்க் குவளையை ஆம்பல் ஒக்கல்லா;- பெரு நீரார் கேண்மை கொளினும், நீர் அல்லார் கருமங்கள் வேறுபடும். - நாலடியார் 236

[5]
நறுநீல நெய்தலும் கொட்டியும் தீண்டிப்
பிறநாட்டுப் பெண்கள் முடிநாறும் பாரி
பறநாட்டுப் பெண்கள் அடி - - யாப்பருங்கல விருத்தி மேற்கோள் பாடல்


Sunday, April 12, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

நற்றிணை (226)

பாடல்:
*******

மரஞ்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்
உரம் சாச் செய்யார் உயர்தவம் வளம் கெடப்
பொன்னும் கொள்ளார் மன்னர் நன்னுதல்
நாந்தம் உண்மையின் உளமே அதனால்
தாம் செய் பொருளன அறியார் தாம் கசிந்து
என்றூழ் நிறுப்ப நீளிடை ஒழியச்
சென்றோர் மன்ற நம் காதலர் என்றும்
இன்ன நிலைமைத்து என்ப
என்னோரும் அறிப இவ் உலகத்தானே.

                 -கணிபுன் பூங்குன்றனார்


திணை: பாலைத் திணை

பாடல் கூறும் நெறி:
*********************

* பொருள் தேடப் போய்வரட்டுமா என்கிறான் தலைவன்.

* போக வேண்டாம் என்று சொல்கிறாள் தலைவி.

* நல்ல மாந்தர் யார், நல்ல மன்னர் யார், உயர்தவம் எது என்றெல்லாம் விளக்கிவிட்டுத் தோழியிடம் அவள் தொடர்கிறாள்.

* அவர் இருப்பதால் தான் நாம் நன்னுதலோடு இருக்கிறோம்.

* உலகில் எந்த நிலையில் வாழ்ந்தாலும் அனைவருக்கும் பிரிவு கூடாது என்று தெரியும் என்கிறாள்.

பாடல் குறிப்பு:
***************

இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் நற்றிணை (எட்டுத்தொகை). இப்பாடலை இயற்றியவர் கணிபுன் பூங்குன்றனார். பாடல் எண் 226. இந்நூலின் பாடல்கள் அகத்திணை சார்ந்தவையாகும்.


தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுவோம். தமிழிற்கு மேலும் அழகு சேர்ப்போம்!

வளர்க தமிழ்!      வாழ்க தமிழ்!

Saturday, April 11, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு (192)
         
பாடல்

யாதும் ஊரே, யாவரும் கேளிர்;
தீதும், நன்றும், பிறர் தர வாரா;
நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது,
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!


              - கணியன் பூங்குன்றனார்

திணை : பொதுவியல்திணை.

துறை : பொருண்மொழிக் காஞ்சித் துறை.

பாடல் கூறும் நெறி

*எல்லா ஊரும் எனக்கு சொந்தம் என கருத வேண்டும்.
*உலகில் உள்ள அனைத்து உயிர்களும் என் உறவுகளே என கருத வேண்டும்.
*தீமையையும், நன்மையையும் யாரும் தர வரமாட்டார்கள்.
*இறப்பு இயல்பான நிகழ்வு.
*வாழ்வு சிறப்பும் இல்லை.
*அறிஞர்களின் அறிவுரையாலே வாழ்வின் இலக்கணத்தை அறிந்தோம்.


பாடல் குறிப்பு

பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு  (எட்டுத்தொகை).
பாடலை இயற்றியவர் கணியன் பூங்குன்றனார். பாடல் எண் 192.புறம் பற்றிய நானூறு பாடல்களை கொண்ட நூல்.

தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளை பின்பற்றுவோம். தமிழிற்க்கு மேலும் அழகு சேர்ப்போம்.

வளர்க தமிழ்!           வாழ்க தமிழ்!!

Friday, April 10, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

குறுந்தொகை (146)
       
பாடல்

அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லா
தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதலவர்
நன்றுநன் றென்னும் மாக்களோடு
இன்றுபெரிது என்னும் ஆங்கணத் தவையே.

               - வெள்ளிவீதியார்

திணை : குறிஞ்சித்திணை

துறை : தலைவன் தலைவியை மனம் பேசுகையில் தலைவனிடத்து தம்மை சேர்ப்பாரா? என கவலையில் தலைவி இருக்கும் வேளையில் தோழி தலைவிக்கு ஆறுதல் அளிப்பது.

பாடல் கூறும் நெறி

*நம்முடைய இந்த காலத்தில் வரதட்சணை ஆண் மகனை பெற்றெடுத்த குடும்பத்தார்கள் பெறுகிறார்கள் ஆனால் அது வழக்கம் அல்ல.
*ஆண் மகன் சீர்களை கொண்டு சென்று பெண்னை பெற்றுக் கொள்வது தான் வழக்கம்.
*அதற்கான நோக்கம் பெண்னை சிறப்பாக பார்த்துக்கொள்ள பொருள் போதுமான அளவு உள்ளதா என்பதை சோதிக்கவே.
*வரதட்சணை வழக்கத்தின் நோக்கம் புரிந்து செயல்படுவோம்.

பாடல் குறிப்பு

பாடல் இடம்பெற்றுள்ள நூல் குறுந்தொகை (எட்டுத்தொகை).
பாடலை இயற்றியவர் வெள்ளிவீதியார். சங்க கால பெண்பாற் புலவர்களில் ஒருவர்.பாடல் எண் 146. பாவகை நேரிசை ஆசிரியர்ப்பா.

தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளை பின்பற்றுவோம். தமிழிற்க்கு மேலும் அழகு சேர்ப்போம்.

வளர்க தமிழ்!           வாழ்க தமிழ்!!

Thursday, April 9, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு (182)
       
பாடல்

உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்!
துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ் எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனையர் ஆகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.

               - கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

திணை : பொதுவியல் திணை

துறை : பொருண்மொழிக்காஞ்சித் துறை

பாடல் கூறும் நெறி

* அமிழ்தமே கைக்கு கிட்டினாலும் தானாக உண்ணுதல் கூடாது.
* புகழெனில் உயிரும் கொடுக்கலாம்.
* பழியெனில் உலகையே கொடுத்தாலும் பெறக் கூடாது.
* மனம் தளருதல் கூடாது.
* யாரையும் வெறுக்கக் கூடாது.


பாடல் குறிப்பு

பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு (எட்டுத்தொகை).
பாடலை இயற்றியவர் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி. பாடல் எண் 182.

தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளை பின்பற்றுவோம். தமிழிற்க்கு மேலும் அழகு சேர்ப்போம்.

வளர்க தமிழ்!           வாழ்க தமிழ்!!