Saturday, April 25, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு (192)

பாடல்:
*******

அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல,
ஓடி உய்தலும் கூடும்மன்;
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே.

                - ஓரேருழவர்

திணை: பொதுவியல் திணை

துறை: பொருண் மொழிக் காஞ்சித் துறை

பாடல் கூறும் நெறி:
*********************

* வாழும் இல்லற வாழ்க்கையானது வேட்டைக்காரன் களர்நிலத்தில் துரத்தும் மான் படும் துன்பம் போல இடர்ப்பாடு உடையதுதான். என்றாலும் அதிலிருந்து அவன் தப்பமுடியாது.

* களர்நிலம் என்பது நேற்றுநிலம். அந்த நிலத்தில் வேடன் ஒருவன் புல்லுண்ணும் புல்வாய் மானை வேட்டையாடத் துரத்துகிறான். அந்த மான் அவனிடமிருந்து தப்பிப் பிழைக்கவும் முடியும்.

* தளையாய் அமைதல் அவனுக்கு மான் களரில் ஓடுவது போன்ற துன்பம். ஒக்கல் வாழ்க்கையால் துன்பம். மனைவி, மக்கள் போன்ற ஒக்கல் வாழ்க்கையால் துன்பம். அவனால் தப்பிப் பிழைக்க முடியவில்லை. ஒக்கல்-வாழ்க்கை அவனுக்குத் தளை. துன்பப் பட்டேனும் அவர்களைக் காப்பாற்றியே ஆகவேண்டும்.

பாடல் குறிப்பு:
***************

இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு (எட்டுத்தொகை). இப்பாடலை இயற்றியவர் ஓரேருழவர். பாடல் எண் 193. இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் புறப்பொருள் சார்ந்தவையாகும்.


தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுவோம். தமிழிற்கு மேலும் அழகு சேர்ப்போம்!

வளர்க தமிழ்!      வாழ்க தமிழ்!

1 comment:

  1. புல்லுண்ணு ங்களரிமண் மான்தப்பும்
    தப்பாது ய்யும்மனை யாண்குடில்.
    வடலூர்ஜெகன்

    ReplyDelete