Thursday, April 16, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு  (400)
         
பாடல்

மாசு விசும்பின் வெண் திங்கள்
மூ வைந்தான் முறை முற்றக்,
கடல் நடுவண் கண்டன்ன என்
இயம் இசையா, மரபு ஏத்திக்
கடைத் தோன்றிய கடைக் கங்குலான்
5
பலர் துஞ்சவும் தான் துஞ்சான்,
உலகு காக்கும் உயர் கொள்கை,
கேட்டோன், எந்தை என் தெண்கிணைக் குரலே;
கேட்டற் கொண்டும், வேட்கை தண்டாது:
தொன்றுபடு சிதாஅர் மருங்கு நீக்கி, 10
மிகப் பெருஞ் சிறப்பின் வீறுசால் நன்கலம்
. . . . . . . . . . லவான
கலிங்கம் அளித்திட்டு என்அரை நோக்கி,
நாரரி நறவின் நாள்மகிழ் தூங்குந்து;
போ தறியேன், பதிப் பழகவும், 15
தன்பகை கடிதல் அன்றியும், சேர்ந்தோர்
பசிப்பகை கடிதலும் வல்லன் மாதோ;
மறவர் மலிந்ததன் . . . . .
கேள்வி மலிந்த வேள்வித் தூணத்து,
இருங்கழி இழிதரும் ஆர்கலி வங்கம் 20
தேறுநீர்ப் பரப்பின் யாறுசீத்து உய்த்துத்,
துறைதொறும் பிணிக்கும் நல்லூர்,
உறைவின் யாணர் , நாடுகிழ வோனே!

               - கோவூர் கிழார்

திணை : பாடாண்திணை

துறை : இயன்மொழிதுறை

பாடல் கூறும் நெறி

*அரசன் தனது கடமையான மக்களை காக்கும் பணியை செவ்வென செய்ய வேண்டும்.
*தன்னை மகிழ்விக்கும் கலைஞர்களுக்கு தக்க பரிசுகளை வழங்க வேண்டும்.
*தனது பரிசுகளால் அவன் முகத்தில் தோன்றும் சிரிப்பை கண்டு மகிழ வேண்டும்
*மக்களை காப்பதையே வாழ்வென கொண்டு வாழ்தல் வேண்டும்.
*இவை அரசு பணியாளர்களுக்கும்,பொது நலன் கருதி வாழ்வோர்க்கும் பொருந்தும்.

பாடல் குறிப்பு

பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு  (எட்டுத்தொகை).
பாடலை இயற்றியவர் கோவூர் கிழார். பாடப்பட்டோன் சோழன் நலங்கிள்ளி.பாடல் எண் 400.

தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளை பின்பற்றுவோம். தமிழிற்க்கு மேலும் அழகு சேர்ப்போம்.

வளர்க தமிழ்!           வாழ்க தமிழ்!!

No comments:

Post a Comment