Sunday, April 19, 2020

எட்டுத்தொகை - ஐங்குறுநூறு

எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றான ஐங்குறுநூறு நூலினைப் பற்றிய தகவல்கள்:

ஐங்குறுநூறு
**************

ஐந்து + குறு = ஐந்திணைகளைக்குறித்த குறும்பாடல்கள்

ஐந்து + நூறு = 500 பாடல்களைக்கொண்டது.


 இந்நூலானது ஐந்திணையில் உள்ள அரசனையும் மக்களையும் அவர்களது சிறப்புகளையும்  கூறும் நூலாகும்....



இந்த நூலில் உள்ள பாடல்கள் குறைந்த அளவாக *மூன்று அடிகளும்*
 உயர்ந்த அளவாக *ஆறு அடிகளும்* கொண்டவை.

 இந்நூல் 500 குறும்பாடல்களால் ஆனது.

ஒவ்வொரு திணைக்கும் *நூறு* பாடல்கள் உள்ளன.

 ஒவ்வொன்றையும் ஒவ்வொருவர் பாடியுள்ளனர்.

 ஒவ்வொரு *நூறுபாடல்களும்  பத்துப் பத்துக்களைக்* கொண்டுள்ளது.


 ஒவ்வொரு பத்தும் ஒரு பெயர் பெறுவது சிறப்பு.

( கருப்பொருள், உரிப்பொருள், பேசும் பாத்திரம், கேட்கும் பாத்திரம் முதலியவற்றுள் ஏதேனும் ஒன்று அப்பெயர்க்கு அடிப்படையாக அமையும். )


இதற்கும் பாரதம் பாடிய பெருந்தேவனார் *கடவுள் வாழ்த்து* இயற்றியுள்ளார்.

 இதனைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய *கூடலூர்கிழார்* .

 தொகுப்பித்தவர் *யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை* என்பவர்.

 இதன் 129, 130 ஆம் செய்யுட்கள் ( பாடல்கள் ) கிட்டவில்லை.

இதில் மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்ற முறையில் திணைகள் கோக்கப்பட்டுள்ளன.


இதனை இயற்றியோர் பற்றிய விவரம் வருமாறு:

மருதம் - ஓரம்போகியார்

நெய்தல் - அம்மூவனார்

குறிஞ்சி - கபிலர்

பாலை - ஓதலாந்தையார்

முல்லை - பேயனார்



இதில் பல புதுமைகள் உண்டு.

இதில் தொண்டிப்பத்து என்னும் பகுதி *அந்தாதியாகவுள்ளது* .


 மேலும் இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், பாங்கியிற் கூட்டம் என்ற கிளவிகளும் ( சொற்களும் ) தொடர்ச்சியாக உள்ளன.


இதில் உள்ளுறையும் இறைச்சியும் மிகுதி. அவ்வாறே புதிய கிளவிகளும் பலவாக அமைந்துள்ளன.


ஒரு **குறிப்பிட்ட அரசனை வாழ்த்திப் பாடும்*  போக்கை இந்நூலில் மட்டுமே காண முடியும்.

‘ **வாழி ஆதன் வாழி அவினி!* ’ என்ற அடி
 பாடல்தோறும் இடம் பெறலை வேட்கைப் பத்தில் காணலாம்.



நாட்டில் பசியும் பிணியும், வறுமையும், அறமற்ற செயல்களும் இல்லாது ஒழியவும்,
 அன்பும் அறமும், ஒழுக்கமும், செல்வ வளமும் பெருகவேண்டும் **என
 வேண்டும் பெண்களை** இந்நூலிலன்றி வேறெதிலும் காண முடியாது.

எ.கா ;


தன் கணவன் ஊரில் ( பாலை நிலத்தில் ) உள்ள கிணற்றடியில் கிடக்கும் *அழுகல் நீர்* , தன் தாய் வீட்டில்
தான் உண்ட தேன்கலந்த *பாலை விட* இனிமையாகக் கருதும் பெண்ணைக்
 *கபிலர்* அறிமுகப்படுத்துகின்றார்.
( பாடல் : 203 )

1 comment:

  1. தேடல் அருமை
    வாழ்த்துக்கள்
    வடலூர்ஜெகன்

    ReplyDelete