Friday, April 24, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு  (279)

கெடுக சிந்தை; கடிதுஇவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை,
யானை எறிந்து களத்துஒழிந் தனனே;
5 நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்,
பெருநிரை விலங்கி ஆண்டுப்பட் டனனே;
இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப்
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
10 ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுக நோக்கிச் செல்கஎன விடுமே.

                 - ஒக்கூர் மாசாத்தியார்.

திணை : வாகைத்திணை.

துறை : மூதின் முல்லைத் துறை

பாடல் கூறும் நெறி

*பெண் என்பவள் எதற்கும் துணிந்தவள்.
*பெண் என்பவளாள் எதையும் தாங்க இயலும்.
*வாள் எடுத்து வாலறுங்கச் சொன்னாலும் தலை அறுக்கச் சொன்னாலும் தயங்கமட்டாள்.
*பெண்ணால் முடியாதது ஒன்றும் இல்லை.


பாடல் குறிப்பு

பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு  (எட்டுத்தொகை).பாடலை பாடியவர் ஒக்கூர் மாசாத்தியார் (279). இவரது இயற்பெயர் மாசாத்தியார். இவர் ஒக்கூர் என்னும் ஊரைச் சார்ந்தவராதலால் ஒக்கூர் மாசாத்தியார் என்று அழைக்கப்பட்டார். இவர் புறநானூற்றில் இயற்றிய இப்பாடல் மட்டுமல்லாமல், அகநானூற்றில் இரண்டு பாடல்களையும் ( 324, 384), குறுந்தொகையில் ஐந்து பாடல்களையும் (126, 139, 186, 220, 275) இயற்றியுள்ளார்.

தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளை பின்பற்றுவோம். தமிழிற்க்கு மேலும் அழகு சேர்ப்போம்.

வளர்க தமிழ்!           வாழ்க தமிழ்!!

1 comment:

  1. தூணாய் தாங்கும் வாளால் சிரசறுக்கும்
    துவளாத் துணிவே பெண்.
    வடலூர்ஜெகன்

    ReplyDelete