தமிழ் காட்டும் நெறி
புறநானூறு (189)
பாடல்:
*******
தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி ; உடுப்பவை இரண்டே; 5
பிறவும் எல்லாம் ஓரொக் குமே;
அதனால், செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.
- மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
திணை: பொதுவியல் திணை
துறை: பொருண் மொழிக் காஞ்சித் துறை
பாடல் கூறும் நெறி:
*********************
* ஒருவன் தெளிந்த கடல் சூழ்ந்திருக்கும் உலகம் அனைத்தையும் பிறருக்கு உரிமை இல்லாமல் தனக்கே உரியதாய் தன் வெண்கொற்றக் குடைக்கீழ்க் கொண்டுவந்து ஆண்டு அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.
* மற்றொருவன் பகல் இரவு என்று பாராமல் நள்ளிரவிலும் உணவுக்கு வேட்டையாட விலங்கினைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். என்று வைத்துக்கொள்வோம்.
* யாராய் இருந்தால் என்ன? அவன் உண்பது ஒரு படி உணவு. உடுத்திருப்பவை மேலாடை, கீழாடை என்று இரண்டே துணி. பிறவற்றை எண்ணிப் பார்த்தாலும் இருவர் நுகர்வும் ஒன்றாகவே உள்ளது.
* அப்படி இருக்கும்போது செல்வத்தைச் சேர்த்துவைத்து என்ன செய்யப் போகிறோம்.
*துய்க்கலாம் என்றால் மிஞ்சித் தப்பிவிடுமே. அதனால் செல்வத்துப் பயன் ஈதல் ஒன்றே.
பாடல் குறிப்பு:
***************
இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு (எட்டுத்தொகை). இப்பாடலை இயற்றியவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார். பாடல் எண் 189. இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் புறப்பொருள் சார்ந்தவையாகும்.
தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுவோம். தமிழிற்கு மேலும் அழகு சேர்ப்போம்!
வளர்க தமிழ்! வாழ்க தமிழ்!

அதியாக்கம் போக்கா பசியுழை யாண்டும்
ReplyDeleteபிடியுண்டே வாழ்வர் எவரும்.
குடிலழித் தேகும் குன்றெனக் குவிக்கும்
நெடிதல்ல பண்டிமா உண்ண.
வடலூர்ஜெகன்