Wednesday, April 15, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு (185)

பாடல்:
*******

கால்பார் கோத்து, ஞாலத்து இயக்கும்
காவற் சாகாடு உகைப்போன் மாணின்,
ஊறுஇன்றாகி ஆறுஇனிது படுமே;
உய்த்தல் தேற்றான் ஆயின், வைகலும்,
பகைக்கூழ் அள்ளற் பட்டு,
மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே.

                - தொண்டைமான் இளந்திரையன்

திணை: பொதுவியல் திணை

துறை: பொருண் மொழிக் காஞ்சித் துறை

பாடல் கூறும் நெறி:
*********************

* காவல்-சாகாடு என்பது உலகினைக் காப்பாற்றி ஓட்டிச்செல்லும் ஒரு வண்டி.

* கைப்போன் என்பவன் அதனைக் கைக்கொண்டு ஓட்டிச் செல்லும் அரசன்.

* கால் என்பது சக்கரம். பார் என்பது வண்டியின் பார். சக்கரத்தை வண்டியில் கோத்து ஞாலம் என்னும் தேரை இயக்குவது ‘காவல்-சாக்காடு’.

* காலத்தைத் தன் மேற்பார்வையில் கோத்து வைத்துக்கொண்டு ஆட்சி-வண்டியை ஓட்டுபவன்.

* ஆள்வோன் திறம் பெற்றவனாக இருக்க வேண்டும் என்கிறான் இந்த அரசன்.

பாடல் குறிப்பு:
***************

இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு (எட்டுத்தொகை). இப்பாடலை இயற்றியவர் தொண்டைமான் இளந்திரையன். பாடல் எண் 185. இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் புறப்பொருள் சார்ந்தவையாகும்.


தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுவோம். தமிழிற்கு மேலும் அழகு சேர்ப்போம்!

வளர்க தமிழ்!      வாழ்க தமிழ்!

1 comment:

  1. அகக்குடிலை ஆள்பவனும் அகிலத்தை காப்பவனும்
    ஆகத்திறன் கொளல் நன்றே.
    வடலூர்ஜெகன்

    ReplyDelete