பரிபாடல் - ஓர் அறிமுகம்
" பரிபா டல்வே தொகைநிலை வகையின்
இதுபா வென்னும் இயல்நெறி இன்றிப்
பொதுவாய் நின்றற்கும் உரித்தென மொழிப "
( தொல். செய் - 425 )
பரிபாடல் என்பது பா இஃது என்று சொல்லப்படும் இலக்கணம் இன்றி எல்லா பாவிற்கும் பொதுவாய் நிற்கும் என இலக்கணம் வகுக்கிறது தொல்காப்பியம்.
செவ்வேள், திருமாள், வையை ஆகிய முப்பொருள் பற்றியும் பதின் மூன்று புலவர்கள் பாடியுள்ளனர். எழுவர் பண் வகுத்துள்ளனர்.
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய பரிபாடல் அகத்துறையையும் புறத்துறையையும் பாடப்பெற்ற நூலாகும். இப்பாடல் பாடப்பெற்ற ஆண்டு கி.பி மூன்றாம் நூற்றாண்டு எனவும், சிலர் கி.பி ஆறாம் நூற்றாண்டு எனவும் கூறுவர்.
முதலில் இந்நூலைப் பதிப்பித்தவர் உ.வே. சாமிநாதர் அவர்கள் ஆவார்.
இது இருபத்தைந்து அடி சிற்றெல்லையும் நானூறு அடி பேரெல்லையும் கொண்டது.
பரிபாடல் தெய்வ வணக்கப் பாடல்களாகவே அமைந்துள்ளன. குறிஞ்சிக்கு முருகனையும், முல்லைக்குத் திருமாலையும், பாலைக்குக் கொற்றவை என்னுங் காடு கிழாரையும், மருதத்திற்கு மதுரை மாதெய்வத்தையும், நெய்தல் நீர் தெய்வமான வையையையும் பாடியுள்ளது.
" திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக் காடுகிழாட் கொன்று - மருவினிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்ய பரிபாடல் திறம்."
என்கிறது பழஞ்செய்யுட் பாடல் ஒன்று.
திருமால் - 8
செவ்வேள் - 31
காடு கிழார் - 1
வையை - 26
மதுரை - 4
ஆக பரிபாடலில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை எழுபது ஆகும். ஆனால் நமக்குக் கிடைத்த பாடல்களின் எண்ணிக்கை 22 பாடல்களே.
கிடைக்கப்பெற்ற பாடல்களின் வரிசையில்,
திருமால் - 6
செவ்வேள் - 8
வையை - 8
ஆகிய இருபத்து இரண்டு ஆகும்.
இப்பாடல் இனிமை ஏறிய பண்ணிசைத்துக் கருத்தாழம் மிகுச் சொற்களால் இயற்றப்பட்டது.
இப்பாடல்கள் நயமெழுந்து நற்றமிழ் ஊறித் திளைத்ததால் எழுந்த காதற்காட்சிகளும், உள்ளத்தோடூடல்புரியும் உயிரெறிய காட்சிகளும் அருட்சுவையுங் கலந்து வரும் சொற்கட்டுகளுங் கூடிச் செய்யப்பட்ட அருசுவையாகும். கழக இலக்கியங்களுள் ஒன்றான பரிபாடலின் பாடற்சுவையினை இனிவரும் பதிவுகளில் அடுத்ததடுத்துக் காண்போம்.

செந்தமிழ் அறிய வாய்ப்பளித்து வருகின்ற உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா
ReplyDeleteவடலூர்ஜெகன்