Tuesday, April 21, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு  (2)

மண் திணிந்த நிலனும்,
நிலம் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு 5
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்
வலியும், தெறலும், அணியும், உடையோய்!
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும் 10
யாணர் வைப்பின், நன்னாட்டுப் பொருந!
வான வரம்பனை! நீயோ, பெரும!
அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ,
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருது, களத்து ஒழியப் 15
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி,
நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச், 20
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை,
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கிற், றுஞ்சும்
பொற்கோட்டு இமயமும், பொதியமும், போன்றே!


               - முரஞ்சியூர் முடிநாகராயர்.

திணை : பாடாண்திணை

துறை : செவியறிவுறூஉ துறை

பாடல் கூறும் நெறி

*மலை அளவு பொறுமை வேண்டும்.
* நிறைந்த செல்வமோ அல்லது குறைவான செல்வமோ கொண்டாலும் பிறற்கு உதவி செய்ய வேண்டும்.
*அது நம் மக்களை துளியும் துன்பம் வரமால் காக்கும்.
*இதுவே பெரிதும் நன்மை பயக்கும்.

பாடல் குறிப்பு

பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு  (எட்டுத்தொகை).
பாடலை இயற்றியவர் முரஞ்சியூர் முடிநாகராயர்.
 பாடல் எண் 2. சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் மீது பாடப்பட்டது.

தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளை பின்பற்றுவோம். தமிழிற்க்கு மேலும் அழகு சேர்ப்போம்.

வளர்க தமிழ்!           வாழ்க தமிழ்!!

2 comments:

  1. இடரிம்மி வராதுக் காக்கும் பொருமை
    ஈதலிருப்ப தில்சிறிதே பெருமை.
    வடலூர்ஜெகன்

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஐயா,
    யான் சங்க இலக்கியம்
    சார்ந்து மகிழ்ந்து
    சிந்தை நிரம்ப
    சீர்விரும்பும் மாணவன்
    எந்தையின் ஏக்கம் தீர்க்க
    எடுத்து நீர் கொடுத்தீர்

    நன்றிப் பலப்பல
    நாளின் நவின்றேன் ஐயனே

    ReplyDelete