Sunday, April 12, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

நற்றிணை (226)

பாடல்:
*******

மரஞ்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்
உரம் சாச் செய்யார் உயர்தவம் வளம் கெடப்
பொன்னும் கொள்ளார் மன்னர் நன்னுதல்
நாந்தம் உண்மையின் உளமே அதனால்
தாம் செய் பொருளன அறியார் தாம் கசிந்து
என்றூழ் நிறுப்ப நீளிடை ஒழியச்
சென்றோர் மன்ற நம் காதலர் என்றும்
இன்ன நிலைமைத்து என்ப
என்னோரும் அறிப இவ் உலகத்தானே.

                 -கணிபுன் பூங்குன்றனார்


திணை: பாலைத் திணை

பாடல் கூறும் நெறி:
*********************

* பொருள் தேடப் போய்வரட்டுமா என்கிறான் தலைவன்.

* போக வேண்டாம் என்று சொல்கிறாள் தலைவி.

* நல்ல மாந்தர் யார், நல்ல மன்னர் யார், உயர்தவம் எது என்றெல்லாம் விளக்கிவிட்டுத் தோழியிடம் அவள் தொடர்கிறாள்.

* அவர் இருப்பதால் தான் நாம் நன்னுதலோடு இருக்கிறோம்.

* உலகில் எந்த நிலையில் வாழ்ந்தாலும் அனைவருக்கும் பிரிவு கூடாது என்று தெரியும் என்கிறாள்.

பாடல் குறிப்பு:
***************

இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் நற்றிணை (எட்டுத்தொகை). இப்பாடலை இயற்றியவர் கணிபுன் பூங்குன்றனார். பாடல் எண் 226. இந்நூலின் பாடல்கள் அகத்திணை சார்ந்தவையாகும்.


தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுவோம். தமிழிற்கு மேலும் அழகு சேர்ப்போம்!

வளர்க தமிழ்!      வாழ்க தமிழ்!

3 comments:

  1. கணியன் பூங்குன்றனார் மிகச்சிறந்த அறிஞர்.இவரை இப்பாடல் எழுதிய ஆசிரியர் கணிபபுன்குன்றனார் என்றுகூறியதடுமாற்றத்தைநற்றிணைஉரையாசியர்அ.ப.பாலையன்நூலில்கண்டுவருந்தினேன்.மேலும்புறநானூறுஉரையாசிரியர்ஞா.மாணிக்கவாசகன்192-ம்பாடலான யாதும்ஊரே-உரைஎழுதும்போது இவர்சோதிடநூலில்வல்லவர் என ஆதாரமின்றிஉளறியுள்ளதும்வேதனைஅளிக்கிறது.

    ReplyDelete
  2. கணியன் பூங்குன்றனார் மிகச்சிறந்த அறிஞர்.இவரை இப்பாடல் எழுதிய ஆசிரியர் கணிபபுன்குன்றனார் என்றுகூறியதடுமாற்றத்தைநற்றிணைஉரையாசியர்அ.ப.பாலையன்நூலில்கண்டுவருந்தினேன்.மேலும்புறநானூறுஉரையாசிரியர்ஞா.மாணிக்கவாசகன்192-ம்பாடலான யாதும்ஊரே-உரைஎழுதும்போது இவர்சோதிடநூலில்வல்லவர் என ஆதாரமின்றிஉளறியுள்ளதும்வேதனைஅளிக்கிறது.

    ReplyDelete
  3. வனிதையர் வதனம் வாடாது உய்யும்
    வரைக்காப்பான் முகம் காண
    வடலூர்ஜெகன்

    ReplyDelete